Header Ads



ஊடகவியலாளர்களுக்கு ஹலால் சான்றிதழ் விழிப்புணர்வு


ஹலால் சான்றுறுதி பேரவையினால் வழங்கப்படும் ஹலால் சான்றிதழ் தொடர்பில் அச்சு ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்து விழிப்புணர்வு செயலமர்வொன்று கடந்த சனிக்கிழமை றோயல் கல்லூரியில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் ஹலால் சான்றுறுதி பேரவை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த செயலமர்வில் சுமார் 20 ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் ஹலால் சான்றுறுதி பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி அலி பதரலி தலைமையிலான குழுவினர் விரிவுரைகளை மேற்கொண்டனர்.




No comments

Powered by Blogger.