ஒரு முஸ்லிம் அரசியல்வாதி என்ற வகையில் வெட்கப்படுகிறேன் - ஹஸன் அலி
முஸ்லிம் சமூகம் இன்று எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒற்றுமையுடன் செயற்படுகிறார்களா அல்லது ஒளிந்து விளையாடுகிறார்கள் என்ற சந்தேகம் தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக தானும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி என்ற வகையில் வெட்கப்படுவதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ரீ.ஹஸன் அலி தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கித் தந்துள்ளாரா என அவரிடம் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகள் உண்மையான மனதுடன் ஐக்கியப்பட்டு செயற்பட்டால் நிச்சயமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எம்மை அழைத்துப் பேசியிருப்பார். ஆனால், எமது பலவீனம், எம்மிடையே காணப்படும் ஒற்றுமை இன்மை போன்றனவற்றை ஜனாதிபதி உட்பட சிங்கள அரசியல் தலைமைகளும் நன்கு புரிந்து வைத்துள்ளனர். இவ்வாறான எமது பலவீனங்கள் காரணமாகவே எமது வேண்டுகோள்களையும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளையும் இப்போது எவரும் பெரிதாகக் கண்டு கொள்கிறார்கள் இல்லை.
முஸ்லிம்களுக்கு எதிராக இன்று எழுந்துள்ள நிலைமைகள் தொடர்பில் எமது அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற அமர்வுகளிலிருந்து ஒரு மாதத்துக்கு முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பிக்கள் விலகியிருப்பது தொடர்பில் நான் ஆலோசனையை முன்வைத்திருந்தேன். எனது இந்த ஆலோசனைக்கு என்ன நடந்தது என்பது அனைவரும் தெரிந்த விடயமே.
முஸ்லிமகளுக்கு எதிரான செயற்பாடுகள் இப்போது ஒரு சாதாரண மாமூலாகி விட்டது. ஒவ்வொரு நாளும் எங்கோ ஒரு மூலையில் ஒரு சம்பவம் இடம்பெற்றுக் கொண்டே உள்ளது. இது இப்போது பழகிப் போன ஒரு விடயமாகப் போய் விட்டது. இவ்வாறானதொரு நிலைமை ஏற்படவும் நாமே காரணமாக இருந்து கொண்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்போதாவது உங்களுகு வெக்கம் வந்ததை இட்டு மிக்க மகிழ்ச்சி, நீங்கள் அனைவரும் அடுத்த கட்ட நாடகத்திற்கு தயரகிறிர்கள் என்பதை எங்களால் ஓரளவுக்கேனும் புரிந்து கொள்ள முடிகிறது..!
ReplyDeleteஏனெனில் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக அரசல் புரசலாக கதை கசியத்துவங்கியதால்..! இவ்வளவு காலமும் தலைவர் மட்டுமே நடித்தார் இப்பொழுது மு.கா செயலாளரும் நடிக்க ஆரம்பித்து விட்டார்..!
It is true.
Deleteஆம் இன்னும் பேசுவார்கள். இவல்களுக்கேது வெட்கம். முஸ்லிம்கள் மொடயர்கள் என்பது இவர்களுக்கு தெரியும். இன்னும் சொல்வார்கள். முஸ்லிம் சமூகம் அரசியல் விழிப்புணர்ச்சி பெறாதவரை இவர்களுக்கு கொண்டாட்டம்தான்,தற்போதைய முஸ்லிம் அரசியல் குரங்கின் கை பூமாலை போல் படிப்பறிவில்லாத பாமர முஸ்லிம்களிடம் சிதறுகிறது.
ReplyDelete