Header Ads



'சுன்னத்து' செய்கையில் ஏற்பட்ட தவறு, 3 மாத குழந்தை வபாத் - கொழும்பில் சம்பவம்

'சுன்னத்து'  செய்கையில் ஏற்பட்ட தவறினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மூன்று மாதக் குழந்தை ஒன்று அதனால் பரிதாபமாக உயிரிழந்தது.

கொழும்பு மாளிகாவத்தைப் பகுதியைச் சேர்ந்த மொகமட் ஹம்டான் என்ற சிசுவே அரைகுறை சுன்னத்துச் செய்த நிலையில் மோசமாகப் பாதிக்கப்பட்டு, கொழும்பு லேடி றிட்ஜ்வே வைத்தியசாலையில் கடந்த 29 ஆம் திகதி சேர்க்கப்பட்டு நேற்று உயிரிழந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மருந்து விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரான மொஹமட் நியாஸ் என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சுன்னத்துச் செய்யும் மருத்துவராகச் செயற்பட்ட இவரின் கவனயீனத்தினாலேயே சிசு பரிதாபமாக உயிரிழக்க நேரிட்டது என்ற சந்தேகத்திலேயே இவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். tw

3 comments:

  1. ஏன் இதை சுன்னத் எண்டு எழுதுகிரீர்ஹல் ??? அரபில் الختنة والختان எண்டு சொல்லப்படும் அஹவே இதை கத்னா எண்டு எழுதுவது வாசிப்பது பிரசாரம் சாய்வதே சரியானது

    ReplyDelete
  2. இப்படியான அரைகுறை சுன்னத்து வைபவர்களின் குறைபாட்டினால், சுன்னத்து வைப்பதுவும் நாட்டில் தடை செய்யப்படலாம்.

    மஞ்சள் துண்டுக்காக தனது தாயின் கழுத்தை கூட வெட்டின சிங்களவன் என்ற பழைய நிலை மாறி, காசுக்காக அப்பாவிக்குழந்தைகளுக்கு எப்படியும் கத்தனா பண்ணி காசு சம்பாதித்து பிழைப்பு நடத்தும் நம்ம சமூக ஆர்வலர்கள் தற்போது நாட்டில் அதிகம். நம் மக்கள் விழிப்புணர்ச்சி பெற வேண்டும்.

    ReplyDelete
  3. Innalillahiwainnalillahirojiun

    ReplyDelete

Powered by Blogger.