Header Ads



முஸ்லிம் காங்கிரஸின் 25 ஆவது பேராளர் மாநாடு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 25ஆவது பேராளர் மாநாடு எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு 07, கிரீன் பார்த் இல் அமைந்துள்ள புதிய நகர மண்டபத்தில் முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகும். 

அன்று மாலை வரை நடைபெறவுள்ள இம் மாநாட்டில் நாடெங்கிலும் இருந்து பெருந்திரளான பேராளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

கிராஅத்துடனும், தக்பீர் முழக்கத்துடனும், தேசிய கீதத்துடனும் ஆரம்பமாகும் இப் பேராளர் மாநாட்டின் முதலாம் அமர்வில் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் ஆன்ம ஈடேற்றத்திற்காக துஆப் பிரார்த்தனையும் இடம் பெறும். 

முதலமர்வின் போது தொடர்ந்து செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி. ஹஸன் அலி ஆண்டறிக்கையை வாசிப்பார். அத்துடன், தேசிய பொருளாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். அஸ்லம் தமது ஆண்டறிக்கையை சமர்ப்பிப்பார்.  கட்சியின் தவிசாளர் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் அங்கு உரையாற்றுவார். 

யாப்பிற்கான திருத்தங்கள், பேராளர்களின் கருத்துரைகள், செயற்குழு பற்றிய அறிவித்தல் என்பனவும் இடம்பெறும். 

பிற்பகல் நடைபெறவுள்ள இரண்டாவது அமர்வின் போது, புதிய உச்சபீட உறுப்பினர்கள் பற்றி அறிவிக்கப்படும். பைஅத் நிகழ்வை அடுத்து தலைவர் பிரதான உரையாற்றுவார். 

2 comments:

  1. அதனுடாக அரசுடன் ஒத்துபேவதையும் நிறுத்துவார்களா அல்ல, பழைய குறிடி கதவை துற என்பார்களா?

    ReplyDelete
  2. முஸ்லிம்களின் உரிமையையும், இருப்பையும், தன்மானத்தையும் அடகுவைத்து பணத்தையும், பதவிகளையும் அனுபவித்த வியாபாரிகள் மீண்டும் ஒருமுறை மக்களை கூட்டி சூடெத்தி தமது அடுத்த கட்ட வியாபரத்துக்கு அடித்தளம் போடுவத்தட்கு ஆயத்தம் செய்கிறார்கள்.

    சென்ற முறை நடந்த பேராளர் மகாநாட்டில் நிறைவேறிய தீர்மானங்கள் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை இந்த மகாநாட்டில் மக்களுக்கு எட்டுத்துக் கூர முடியுமா.. இந்த தலைமைத்துவத்துக்கு???

    ReplyDelete

Powered by Blogger.