விமல் வீரவன்ச பல்டியடித்தார்..!
அரசாங்கத்தில் இருந்து விலகும் நோக்கத்துடன் தமது கட்சி எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது அரசாங்கத்தை சரியான பாதைக்கு கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்படும் நேர்மையான முயற்சி. இதனால் அரசாங்கத்தை விட்டு வெளியேறும் முயற்சியாகவே தேசிய சுதந்திர முன்னணி இதனை மேற்கொண்டு வருகிறது என எவரும் நினைக்க வேண்டாம்.
நான் அப்படியான எண்ணத்தில் இதனை மேற்கொள்ளவில்லை. உண்மையான நோக்கத்தில் அரசாங்கத்தை சரியான வழிக்கு கொண்டு வரும் முயற்சியே இதுவாகும். அரசாங்கத்தின் நலனுக்காகவே இதனை செய்து வருகிறோம். தேனீரை அருந்தி கொண்டு கூறுவதை ஏற்காத போதிலும் இவ்வாறு வெளிப்படையாக கூறினால் கேட்க வேண்டியவர்களுக்கு நன்றாக கேட்கும்.
எதிர் சக்திகளுக்கு வெற்றி கிடைக்கும் விதத்தில் பயணிக்கும் அரசாங்கத்திற்குள் இருந்து அர்த்தமில்லை என்பதே எமது நிலைப்பாடு. அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் நோக்கத்தை நிறைவேற்றும் காரியமாக இதனை கருதக் கூடாது. அது தவறானது எனவும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment