'விஜய குமாரதுங்க + சரத் முத்தேட்டுவகம உயிருடன் இருந்திருந்தால், இனவாத, மதவாதிகள் தோன்ற இடமிருந்திருக்காது'
விஜய குமாரதுங்க மற்றும் சரத் முத்தேட்டுவகம ஆகியோர் உயிருடன் இருந்திருந்தால், இலங்கையில் இனவாதம் மற்றும் மதவாதிகள் தோன்ற இடமிருந்திருக்காது என முன்னாள் இராஜதந்திரியும் அரசியல் விமர்சகருமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற சரத் முத்தேட்டுவகமவின் 28வது சிரார்த்த தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவர்களின் மரணங்கள் ஏற்பட்ட காலத்தில் இலங்கையின் அரசியல் வரலாறு முற்றாக பின்நோக்கி சென்றது.
இவர்கள் இருவரும் உயிரிழந்திருக்காவிட்டால் இலங்கையில் அரசியல் வரலாறு இதனை விட பாரிய மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கும். இலங்கையின் அரசியல் மிகவும் முன்னேற்றமான நிலையில் இருந்திருக்கும்.
விஜய குமாரதுங்கவும் சரத் முத்தேட்டுவகம ஆகியோர் உயிருடன் இருந்திருந்தால், இலங்கை அரசியல் எப்படியான சம நிலையில் இருந்திருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
இடதுசாரி அமைப்புகளும் முற்போக்கு சிந்தனையாளர்களையும் உருவாக்க வேண்டும்.
இன்றைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இடதுசாரிகள், முற்போக்கான பின்னணியை கொண்ட பாரம்பரியத்தில் வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பொது செயலாளர்கள் இருக்கின்றனரா என்பதே கேள்வியாகும் எனவும் தயான் ஜயதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment