இஸ்லாத்தை தழுவிய முன்னாள் பௌத்த குரு கடத்தப்பட்டார் - கண்டியில் சம்பவம்
இஸ்லாத்தை கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் தனது வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டு, முஸ்லிமாக வாழந்துவந்த முன்னாள் பௌத்த குரு ஒருவர் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை கண்டியில் வைத்து அடையாளம் தெரியாத குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, முஸ்லிம் சகோதரியை திருமணம் செய்துள்ளதுடன், அதன் மூலம் 2 குழந்தைகளும் உள்ளன.
கம்பளை நகர சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த இவருக்கு தொலைபேசி அழைப்பொன்று கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமைய அவர் முச்சக்கர வண்டியில் கண்டிக்கு சென்றுள்ளார். அங்குவைத்தே அவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டி சாரதி இதுகுறித்து சம்பந்தப்பட்டவரின் மனைவிக்கு அறிவித்துள்ளார். இதுகுறித்து மனைவி உடனடியாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அல்லாஹ் தான் காப்பத்தனும்...! ஏனெனின் இலங்கியில் இனந்தெரியாத நபரினால் கடத்தப்பட்டால் இறுதி வரை அது இனந்தெரியாமலே போய்விடும்..!
ReplyDeleteஇது பற்றி தகவல்கள் பரப்பி உரிய நடவடிக்கைகள் எடுக்க வேன்றும். என்ன அனியாயம் இது.
ReplyDeleteஇஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்று அவர் உறுதிப் படுத்தி விடுவரோ என்ற பயம் தான் இவனுகளுக்கு .
ReplyDeleteஇந்த கூட்டத்துக்கு கடைசி காலம் நெருங்கி விட்டது .
அல்லாஹ் இவர்களுக்கு உரிய கூலியை கூடிய சீக்கிரம் கொடுப்பானாக.