Header Ads



மலேசியாவில் முக்கிய விடுதலை புலி உறுப்பினர்கள் கைது (படங்கள் இணைப்பு)


மலேசியாவில் களாங் வலியில் இன்று பல்வேறு இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, மலேசிய காவல்துறை மாஅதிபர்  தன் சிறி காலித் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.  பெட்டலிங் ஜாயா மற்றும் களாங் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இவர்கள் பிடிபட்டுள்ளனர். 

2004ம் ஆண்டு தொடக்கம் இவர்கள் மலேசியாவில் அகதிகள் என்ற போர்வையில் வசித்து வந்துள்ளனர். 

உலகெங்கும் திரட்டப்படும் நிதியைக் கொண்டு இவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உயிர் கொடுக்க முனைந்ததாகவும் மலேசிய காவல்துறை கூறியுள்ளது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தோற்கடிக்கப்பட்ட புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் என்று தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இவர்கள் மூவரும் குடிவரவுச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  அவர்களில் ஒருவர் புலிகளின் வான்புலிகளின் பிரதி தலைவர் என்றும், மற்றொருவர் புலனாய்வு தலைவர் என்றும் மூன்றாமவர், ஊடக விவகார தலைவர் என்றும் மலேசிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 

கைது செய்யப்பட்டவர்கள் மூவரும் 30 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர். இவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் தடைப்பட்டியலில் இடம்பெற்றவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.



No comments

Powered by Blogger.