Header Ads



'அடிப்படைவாத சக்திகளின் அழுத்தங்கள் காரணமாகவே விக்னேஸ்வரன் ஜனாதிபதியின் அழைப்பினை நிராகரித்தார்'


வடமாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனின் நடவடிக்கைகளுக்கு ஆளும் கட்சியினர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அடிப்படைவாத சக்திகளின் அழுத்தங்கள் காரணமாகவே விக்னேஸ்வரன் ஜனாதிபதியின் அழைப்பினை நிராகரித்தார் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். வடக்கில் தொடர்ந்தும் இயங்கி வரும் கடும்போக்குடைய சக்திகளின் அழுத்தங்கள் காரணமாகவேவே இவ்வாறு விக்னேஸ்வரன் நடந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக ரீதியில் அமைதியான சூழ்நிலையில் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட வட மாகாணசபையின் முதலமைச்சர், பிரிவினைவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு அடி பணியக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதியுடன் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பிரச்சினைகள் குறித்து பேசியிருக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. தமது 'கலீபாவின்' புகழ்பாட நியமிக்கப்பட்ட ஒரு சுயநலமிக்க 'போனஸ்' உறுப்பினர்.... மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதேநேரம் ஒற்றுமையாக நின்று உறிமைக்காக போறாடும் ஒரு சிறந்த தலைவர் பற்றி கருத்து தெரிவிக்கும் ஒரு அறிவு கெட்ட ஜன்மம். இதற்கு அந்த மான்புமிகு விக்னேஙஸ்வரன்தான் இவருக்கு சிறந்த பதில் கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
  2. அவரை முதலமைச்சராக தேர்ந்தெடுத்த மக்களின் விருப்பத்தின் படியே அவர் இந்தியாவுக்கு போகவில்லை. தமிழ் நாடு பூராவும் தமிழ் மக்கள் போராட்டம் வெடித்துகொண்டிருக்கும் நிலையில் முதலமைச்சர் சீ. வீ யும் கூடப்போனால் என்ன நடக்கும். தமிழ் நாட்டிலே மக்கள் கொந்தளித்து எழுந்து கூச்சலிட்டுக்கொண்டிருப்பது. இலங்கை தமிழர்களுக்காகத்தான் (அது அரசியல் இலாபத்துக்கானதா இல்லையா என்பது இரண்டாவது விடயம்) அதே சமயம் இவரும் அவரும் கை கோர்த்துக்கொண்டு ஜோடியாக போனால் அதன் அர்த்தம் என்ன? சரி அப்படி கூட்டிகொண்டு சென்று எதையாவது சாதித்த பின் சிறுபான்மையிருக்கென்று அவர்களின் உரிமைகளை பகிர்ந்தளிக்கின்றார்களா? இல்லையே. அதற்குப்பகரமாக சிறுபான்மையினரை விரட்டியடிக்கும் நிலையிலேயேதான் இருக்கின்றார்களே தவிர இன்று வேறென்ன நடக்கின்றது. ஏன் அவைகளை ஜனாதிபதியால் கட்டுப்படுத்த முடியாதா.

    எல்லாவற்றிற்கும் மேலாக: முஸ்லிம்களுக்கும் இவ்வளவு கொடுமையும் நடக்கின்றதே ஜனாதி அவர்கள் பஹ்ரைன் போகும் போது அமைச்சர் ரிசாட் பதியுதீனை கூட்டிக்கொண்டு சென்று அங்கு என்ன பேசி கலிபா பட்டம் பெற்றார்? முஸ்லிம்களுக்கு எமது நாட்டில் ஒரு பிரைச்சினையும் இல்லாமல் நிம்மதியாக வாழ்கின்றாகள். என்று சொன்னது மட்டும்தான் நமக்குத்தெருயும் மற்றவை ஒன்றும் தெரியாது.

    முஸ்லிம் நாடுகளிடம் போய் பிச்சை எடுப்பதுவுமில்லாமல் நாட்டிலுள்ள முஸ்லிம்களை விரட்டியடிக்கும் பொண்ணையர்களுக்கு ஒரு வார்த்தைகூட பேச முடிவதில்லை. இப்படி ஒரு பிழைப்பு செய்து ஆட்சி செய்யவேண்டுமா. பெரும்பான்மையினரின் வாக்குகளை இழ்க்கக்கூடாது என்பதற்காக சிறுபான்மையினரை ஒட்டுமொத்தமாக அழித்து விடலாமா? இதுதான் ”நீங்கள் என்னை நாம்பலாம் நான் உங்கள் சோந்தக்காரன்” என்பதன் அரதமா??? இன்னுமொரு தேர்தல் வரும்போது இதே டயலொக் வரும் அப்போ பொறுத்திருந்து நம்புங்கள்.

    ReplyDelete
  3. உம்மைப்போன்றவர்கள் உடைக்கப்பட்ட பள்ளிகளை உடைக்கவில்லை என்று சொல்லும்போது. சீ. வீ போன்றவர்கள் தன் மக்களுக்காக சிறியதொரு விடயத்தில் தைரியமாக நின்று பேசக்கூடியதை பார்க்கும்போது சந்தோசமாக இருக்கின்றது.


    தயவு செய்து ஒங்க வேலய மட்டும் பாருங்கய்யா. ஒங்கட ஆசனம் அது மட்டும்தான் முக்கியம். அதுக்காக ஒங்க சமுதாயத்த மட்டும் சாவடிச்சா போதாதா.

    ReplyDelete
  4. Uncle, you become funny these days.

    ReplyDelete
  5. எந்த புத்திஜீவிகளும் கண்டுபிடிக்காத மிக உண்ணிப்பான உண்மையை இந்த அஸ்வர் தாத்தா கண்டுபித்து விட்டார்,கில்லாடிதான்.

    இதனையே, ஜனாதிபதி விமானாத்திலிருந்து இரங்கி வந்தவுடன்,முதலில் நேரிடையாக சொல்லுவார்,குழந்தைப்பிள்ளை தன் தகப்பனிடம் அப்பா இவன் எனக்கு ஏசிவிட்டான் அடித்து விட்டான் எனறு முறையிடுவது போன்று.

    ReplyDelete
  6. IWANUKKU SERUPPALA ERIURA KALAM MIKA WIRAIWIL WANTHU WITTATHU ETHTHINA THARANDA KALUTHA UNAKKU MANISAN ESURA

    ReplyDelete

Powered by Blogger.