பொத்துவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டம்
(ஏ.எல்.ஜனூவர்)
பொத்துவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டம் அம்பாரை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லா தலைமையில் பொத்துவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (29) இடம் பெற்றது.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.வாசித், அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன், பிரதேச செயலாளர் எம்.எம்.முசர்ரத், உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் இணைப்புச் செயலாளர், சட்டத்தரணி எம்.எம்.எம்.பஹ்ஜி, உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சரின் இணைப்பாளர் ஏ.பதுர்கான், உட்பட அரச திணைக்கள தலைவர்கள், அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
sir எல்லாம் சரி
ReplyDelete1] இந்த பொது பல சேனா வுக்கு ஒண்டும் செய்ய ஏலாதா? அவனுகள் அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?
2] அபிவிருத்தி, அபிவிருத்தி எங்கங்கயலே...! இதுல கட்டடமும், பள்ளியில் அரசியலும் புகுந்தது தானே மிச்சம்..!
3] நம்மிட மாண்புமிகு ஜனாதிபதிக்கு பள்ளி பிரச்சின, ஹலால் பிரச்சினை ஒண்டும் தெரிய என்கார் இது அவர்ர நடிப்பா?படிப்பா?
4] நுரைச்சோலை வீட்டுத்திட்டம் மக்களுக்கு குடுப்பங்களா? இல்ல புண்ணிய பூமியாகுமா?
5] மாநகரசபை, மாநகரசபை எண்டு சொல்றாங்க மீன் மார்கட்டு களிவுத்தண்ணி தேங்கி நாறுதே அதுக்கா இல்ல
மெயின் ரோட்டு கான் எல்லாம் நாறுதே அதுக்கா?
6] எள்ளாலும் BH ல மருந்தெடுக்க போராம் எங்களுகள் அங்க மருந்து குடுக்க ஆளுமில்ல, மருந்தும் இல்லையாமே..!
என்ன செய்யலாம் sir? நானும் என்குவாப்பட கதைய கேட்டு ஒங்களுக்கு வோட்டு போட்ட.. நீங்ககளும் பொழ செய்றயல் எண்டு ஆக்கள் சொல்லாக்க ஆடும் வருத்தமா இருக்கு..!