மதங்களுக்கிடையே பிரச்சினைகள் தோன்றியுள்ளது - விமல் வீரவன்ச
(அஸ்ரப் ஏ சமத்)
அமைச்சர் விமல் வீரவன்சவின் இன்று பத்தரமுல்லையில் உள்ள அவரது தேசிய சுதந்திர முன்ணனி கட்சியில் நடாத்திய ஊடகவியலாளர் மாநட்டில்.
எமது கட்சியின் 2வது சம்மேளனத்தின்போது நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி டி.பி ஜயசுந்தரவை நீக்குமாறு எங்களது 12 கோரிக்கைகளில் அடங்கவில்லை. ஆனால் இந்த நாட்டின் பொருளாதார பின்னடைவுக்கு உள்ள இந்த ஜயந்தரவையும் நாம் விமர்சனம் செய்தோம். ஆனால் அரசோ பொருளாதார அமைச்சில் இருந்து அவரை நீக்கி நிதியமைச்சில் வைத்துக்கொண்டிருக்கின்றார்கள். இது ஏதோ அழுகின்ற குழந்தைக்கு சிறு டொபி துண்டை கொடுத்து அழுகையை நிற்பாட்டுகின்ற செயலாகவே நான் இதைப் பார்க்கின்றோம்.
உங்கள் கட்சியில் இருந்த 2 ஊவா மாகணசபை உறுப்பினர்கள் இருவரில் ஒருவர் சு.கட்சிக்கும் மற்றவர் ஜ.தே.கட்சிக்கும் மாற்றியுள்ளனரே - இதுவும் அரசாங்கத்தின் வேலைதான் ஜ.தே.கட்சிக்கு சென்றவர் எதிர்வரும் மாகாணசபையின் வென்றவுடன் மீண்டும அவரையும் சி.ல.சு.கட்சிக்குள் கட்சி உள்வாங்கச் சொல்லுவார்கள்.
கடந்த மே 5ஆம் திகதி நாங்கள் நடாத்திய கட்சி சம்மேளணத்தில் அரசுக்கும் ஜனாதிபதிக்கும் 12 கோரிக்கைகளை முன்வைத்தோம். அதற்கமைவாக சீன சென்று நாடு திரும்பிய ஜனாதிபதி வெள்ளிக்கிழமை என்ணை தொலைபேசி முலம் எமது கட்சியிக்கு அழைப்புவிடுத்திருந்தார். நேற்று சனிக்கிழமை மு.ப. 11.00 மணியளவில் அலரி மாளிகைக்கு நாங்கள் சென்று எங்களது 12 யோசனைகள் பற்றியும் எங்களது நிலைப்பாடுகள் பற்றியும் ஜனாதிபதிக்கு விரிவாக எடுத்துக் கூறிணோம். இவ்விடயம் பற்றி விரிவாக ஸ்ரீ.ல.சு.கட்சியின் அமைச்சர்களுடன் ஆராய்ந்தபின் மீள தங்களுடன் இவ்விடயம் பற்றி பேசுவாதாக ஜனாதிபதி எங்களுக்குச் சொல்லியிருக்கின்றார்.
இந்த நாட்டில் பொருளதார வீழ்ச்சியில் கண்டு வருகின்றது. மதங்களுக்கிடையே பிரச்சினைகள் தோண்றியுள்ளது. பொருளாதாரம் கிராமங்களுக்குச் சென்றடைய வேண்டும். வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு மேற்கொள்கின்ற நிபந்தணைகளுக்கு அடிபணியாது இந்த நாட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்வது, அண்மையில் அரசினால் கொண்டுவந்த சூது சட்டத்தை வாபஸ் பெருதல். சகல சமுகங்களும் ஒழுக்கமானதொரு காலாச்சாரத்தை கட்டியெழுப்புதல் போன்ற 12 நிபந்தனைகள் முன்வைத்துள்ளோம். இதற்கு அவர்கள் இணங்கினால் அவர்களுடன் ஒத்துப்போவோம்.
அல்லது சந்திரிகா ஆட்சிக் காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியினர் பரிவாச அரசாங்கத்திற்கு அந்த அரசை 1 வருடத்திற்குள் கலைத்த மாதிரி நாங்களும் புதியதொரு அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சியில் இறங்குவோம். எங்களது 12 கொள்கைகளை கொண்டு இந்த அரசாங்கத்தை சரியான பாதைக்கு கொண்டு செல்வதே எமது நோக்கம். இதனையே நாங்கள் அண்மையில் சந்தித்த பௌத்த நாயக்க தேரர்கள், கிரிஸ்த்துவ மல்கம் ரண்ஜித் எங்களது யோசனைக்கு ஆசிர்வாதம் வழங்கியுள்ளார்கள். அடுத்து வரும் தினங்களில் இஸ்லாம், ஹிந்து மதப் பெரியார்களிடமும் எங்களது யோசனைகளை சமர்ப்பிப்போம்.
Post a Comment