Header Ads



'அல்லாமா' பட்டம் பெற்றார் முபாறக் மௌலவி

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

முபாறக் அப்துல் மஜீத் எழுதிய இலங்கையின் இஸ்லாமிய இயக்கங்கள் எனும் நூல் வெளியீடு நேற்று (25) கொழும்பு-10இல் உள்ள முஸ்லிம் பெண்கள் கல்வி ஆய்வு மையத்தில் கொழும்பு தாருள் குர்ஆன் ஹிபுல் மத்ரஸாவின் அதிபர்  மௌலவி அஸ்ஹர் பஹாவி தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்விற்கு பிரதம அதிதியாக இந்தியாவின் மணிமேகலை பிரசுரத்தின் உரிமையாளர் ரவி தமிழ் வாணன் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக ஜனாதிபதியின் கத்தோலிக் விவகார இணைப்பாளர் அதி வணக்கத்திற்குரிய சரத் ஹெட்டியாராச்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் வரவேற்புரையை நூலாசிரியர் முபாறக் அப்துல் மஜீத் வழங்கியதுடன் தலைமை உரையை தாருள் குர்ஆன் ஹிபுல் மத்ரஸாவின் அதிபர் மௌலவி அஸ்ஹர் பஹாவியும், வாழ்த்துரையை வைத்தியர் தாஸிம் அஹமதுவும், நூலாய்வினை மணிப்பலவர் மருதூர் ஏ மஜீதும்  வழங்கினர்.

மேற்படி நிகழ்லில் முதற் பிரதிகளை வை.எம்.எம்.ஏயின் முன்னாள் தலைவர் எம்.சி.தாசிம், சமூகஜோதி ரபீக், பொலிஸ் திணைக்கள அதகாரி பாயிஸ், விடியல் இணையத்தள ஆசிரியர் றிப்த்தி அலி உள்ளிட்ட பல பிரமுகர்ளும் பெற்றுக் கொண்டனர்.

நூல் வெளியீட்டு நிகழ்வில்  சமூகஜோதி ரபீகினால் நூலாரியருக்கு பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணுவிக்கப்பட்டதுடன் தற்போது உலகலாவிய ரீதியில் தமிழ் பேசும் மக்கள் பயன்படுத்தும் தமிழ் மொழி பெயர்ப்பான அல்குர்ஆன் தர்ஜூமாவிற்கு மதீனாவில் வைத்து தமிழ் மொழி பெயர்ப்பு மேற் கொள்ளப்பட்டபோது அக்குழுவில் இடம்பெற்ற ஒரேயொரு இலங்கையாராக மட்டுமல்லாது அதற்கு சேவையாற்றிமைக்காகவும் அவரைக் கௌரவிக்கும் வகையில்  கொழும்பு தாருள் குர்ஆன் ஹிபுல் மத்ரஸாவினால் முபாறக் மௌலவிக்கு அல்லாமா என்ற பட்டத்தை  மத்ரஸாவின் அதிபர் மௌலவி அஸ்ஹர் பஹாவியும், மத்ரஸாவின் பொருலாளர் மௌலவி எம்.ஜே.எம்.பதுர்தீன் ஆகியோரால் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிகழ்வில் கலைத்துறை ஆர்வளர்கள், பத்தி ஜீவிகள், ஊடகவியலாளர்கள் என  பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.  




No comments

Powered by Blogger.