[பொது அறிவித்தல்]
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு!
வாக்காளர் பதிவு – 2014
2014 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் தேர்தல் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜுன் மாதம் முதலாம் திகதி வாக்காளர் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஜுன் மாதம் 15 ஆம் திகதி வரை வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
18 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகளாகிய ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியோர்கள், நிரந்தர அல்லது தற்காலிக (கூலி வீடு) முகவரியில் வசிப்போர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்போர் என அனைவரும் கட்டாயம் தமது வாக்குரிமையைப் பதிவுசெய்துகொள்ளுமாறு தேசிய ஷூறா சபை பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றது.
வாக்காளர் பதிவு நடவடிக்கைக்கு குறித்த வாக்காளரின் பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது கடவுச்சீட்டு இலக்கம் எனும் விபரங்கள் மாத்திரமே வேண்டப்படுகின்றன. பொதுவான மதிப்பீட்டின் படி இலங்கை முஸ்லிம் வாக்காளர் எண்ணிக்கை சுமார் 15 இலட்சம் என கணிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் தனி நபர்களின் கவனயீனம் அதேபோல பிரதேச சமூக அமைப்புக்களின் ஆர்வமின்மையும் முஸ்லிம் வாக்காளர் பதிவில் பின்னடைவை எடுத்துக்காட்டுகின்றன.
வாக்களர் பதிவு வெறுமனே வாக்களிப்புடன் மாத்திரம் தொடர்புடைய விடயமல்ல மாறாக குடியுரிமை மற்றும் அனைத்து வகையான நாளாந்த விடயங்களிலும் வேண்டப்படும் மிக முக்கியமான அத்தாட்ச்சிப்படுத்தல் ஆவனம் ஆகும்.
எனவே மஸ்ஜித் நம்பிக்கையாளர் சபைகள், சமய மற்றும் சமூக அமைப்புக்கள், மற்றும் பிரதேச சமூக ஆர்வளர்கள் முன்நின்று தமது பிரதேச முஸ்லிம் வாக்காளர்கள் அனைவரும் சரியான முறையில் பதிவுசெய்யப்படுவதற்காக வழிகாட்டல்களை வழங்குவதுடன், கிராம உத்தியோகத்தர்களுடன் இணைந்து வாக்காளர் பதிவு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தேவையான பூரண ஆதரவையும் வழங்குமாறு தயவாய் வேண்டிக் கொள்கின்றோம்.
உங்கள் பங்களிப்புக்கும், ஒத்துழைப்புக்கும் எல்லாம்
வல்ல அல்லாஹ் நட்கூலி வழங்குவானாக! ஆமீன்.
ஜஸாக்குமுல்லாஹ் ஹைரன்!
இஸ்மாயீல் அப்துல் அஸீஸ்
பொதுச் செயலாளர்
குறிப்பு:
மஸ்ஜித்கள் மற்றும் தேசிய பிராந்திய, ஊர்மட்ட அமைப்புகளினூடாக இது பற்றிய விழிப்பூட்டலை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத் தவும். இந்த அறிவித்தலை மஸ்ஜித்களில் ஜும்ஆ தொழுகையின் பின்னர் வாசித்து பொது மக்களுக்கு தெளிவுபடுத்துவதுடன் பள்ளிவாசல் அறிவித்தல் பலகையில் பிரசுரிக்குமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
Post a Comment