இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சிறுபான்மையினரை தனிமைப்படுத்தும் - அமெரிக்கா
இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டு வரும் மத்தியமய அபிவிருத்தி மற்றும் அரசியல் நடவடிக்கைகள் காரணமாக இன மற்றும் மதரீதியில் சிறுபான்மையினங்கள் தனிமைப்படுத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்படும் சமவுரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் என்பனவும் உள்ளடங்கும் என்று அமெரிக்க அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
26 வருட காலப்போர் முடிவடைந்து ஐந்து வருடங்கள் கழிந்துள்ள போதிலும் கடந்த காலங்களை விட தற்போது சவால்கள் எதிர்நோக்கப்படுவதாக அமெரிக்க அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
வடக்கு மாகாண தேர்தல் நடைபெற்ற பின்னர் அங்கு சிறியளவிலான நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க அரசாங்கம் காங்கிரஸ்சுக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்துடன் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் செயற்பட அமெரிக்கா விருப்பம் கொண்டுள்ளது.
இதற்காக யுஎஸ்எய்ட் நிறுவனம் முன்னாள் போர் வலயப்பகுதிகளில் இளைஞர் வலுவூட்டல் மற்றும் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் மத்தியில் பல வேலைத்;திட்டங்களை முன்னெடுத்து செல்கிறது.
அத்துடன் சுதந்திரமான ஊடகத்துறைக்கான உதவிகளை வழங்கி வருகிறது.
இன்னும் உள்ளுரில் மீள்குடியேற்றப்படாமல் இருக்கும் மக்களுக்கான உதவிகளை வழங்கி வருகிறது.
அதேநேரம் இறுதி சமாதானததுக்காகவும் அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது
Post a Comment