மத்திய ஆபிரிக்க குடியரசில் பள்ளிவாசல் தாக்கி அழிப்பு
மத்திய ஆபிரிக்க குடியரசில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்று தாக்கப்பட்டதற்கு பதிலடி யாக தலைநகர் பங்குயில் இருக்கும் பள்ளிவாசல் இளைஞர் குழு ஒன்றினால் தாக்கப்பட் டுள்ளது.
தலைநகரில் இருக்கும் கடைசி பள்ளிவால்களில் ஒன்றே நேற்று முன்தினம் வியாழக் கிழமை தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில்; மக்கள் ஒன்றுகூடி இருந்த வேளை ஆயுததாரிகள் துப்பாக்கிச்சூடு மற்றும் கைக்குண்டு தாக் குதல்களை நடத்தியதில் 11 பேர் கொல்லபபட்டனர். எனினும் பள்ளிவாசல் தாக்கப்பட்ட போது அங்கு எவரும் இருக்காததால் உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லை.
முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட செலகா கிளர்ச்சியாளர்கள் ஆட்சியை கைப் பற்றியதை அடுத்து மத்திய ஆபிரிக்க குடியர சில் கடந்த ஓர் ஆண்டாக இன மற்றும் மத வன்முறைகள் தீவிரம் அடைந்துள்ளன. எனினும் கிறிஸ்தவர்களின் செலகா எதிர்ப்பு ஆயுத தாரிகள் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியது மற்றும் சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்ததை அடுத்து செலகா கிளர்ச்சியாளர்கள் கடந்த ஜனவரியில் அதிகாரத்தை விட்டு வெளியேறினர்.
இந்த வன்முறை காரணமாக தலைநகர் மற்றும் அதனை அண்டியபகுதிகளில் இருந்து முஸ்லிம்கள் வடக்கு மற்றும் அயல்நாடுகளை நோக்கி வெளியேறியுள்ளனர். மத்திய ஆபி ரிக்க குடியரசின் வடகிழக்கு பகுதியை முஸ்லிம் கிளர்ச்சி படையினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இந்த வன்முறை காரணமாக இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருப்பதோடு மில்லியன் கணக்கானோர் வெளியேறியுமுள் ளனர். நாட்டில் பாதியளவானோரான சுமார் 2.5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில் உள்ளனர். ஆபிரிக்க மற்றும் ஐரோப்பிய அமைதிகாக்கும் படையினர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தபோதும் அவர்கள் வன்முறையை தடுப்பதில் தோல்வியடைந்துள் ளனர்.
Post a Comment