அஹதியா ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் - ஹுனைஸ் பாரூக்
கல்வியமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் கடந்த 2014.05.23ம் திகதி பாராளுமன்றத்தில் கல்வியமைச்சர் பந்துல குனவர்தன தலைமையில் இடம் பெற்றது. இக்கூட்டத்திற்கு அமைச்சின் யெலாளர், அமைச்சர்கள்;, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ்பாரூக்:-நாட்டில் தற்போது இஸ்லாம் பாடத்திற்கான ஆசிரியர் பற்றாக்குறை நிகழ்வதாகவும் இவ்வெற்றிடத்தை தகுதியான ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்ற வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார்.
மேலும் நீண்டகாலமாக அகதியா பாடசாலை ஆசிரியர்கள் தொண்டர் ஆசிரியர்களாகவே கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள், எனவே பௌத்த மத பிரிவெனா கல்வி ஆசிரியர்களுக்கு அரச நியமனம் வழங்கப் பட்;டது போல் இந்து மத, கிரிஸ்தவ மத மற்றும் முஸ்லிம் சமயங்களின் பிரிவெனா கல்வி ஆசிரியர்களையும் அரச நியமனங்களுக்கள் உள்வாங்க வேண்டுமென்ற கோரிக்கையையும் பாராளுமன்ற உறுப்பினர் முன்வைத்தார்.
மேலும் இந்த நியமனங்களைச் செய்வதற்குத் தேவையான தகவல்களை, வெற்றிடங்களை நாட்டின் அனைத்துப் பாடசாலைகள், அகதியாக்கள், இந்து, கிறிஸ்தவ தகம் பாடசாலைகளிலிருந்து பெறுவதற்கு ஏற்பாடு செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்ததாகவும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
Post a Comment