மாத்தளை மனிதபுதைகுழி - மரணத்திற்கு முன் பாரிய சித்திரவதை, மண்டை ஓடுகளில் ஆணிகள்
மாத்தளை மனிதபுதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சடலங்களுக்குரிய தரப்பினர் மரணத்திற்கு முன்னர் பாரிய சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சான்றுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித எச்சங்கள் மீட்கப்பட்டமை குறித்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சுனில் வட்டவல தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள மருத்துவ அறிக்கைக்கு அமைய சில மனித எலுப்புக் கூடுகளின் மண்டை ஓடுகளில் ஆணிகள் அறையப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர, கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு காயங்கள் ஏற்பட்டமைக்கான தடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பி;டடார்.
2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் திகதி மாத்தளை மருத்துவமனை வளாகத்தில் வாயு குழாய் பொறுத்தும் பணிகளுக்காக நிலம் தோண்டப்பட்ட நிலையில், இந்த எலும்புக் கூட்டு தொகுதிகள் கண்டுப்பிடிக்கப்பட்டன.
இந்த எலும்புகளை பரிசோதனை செய்த களணி பல்கலைக்கழகத்தின் விசேட மரண விசாரணை போராசிரியர் குழுவினர், இவை 1987 – 1990 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குறியவை என குறிப்பிட்டனர்.
மாத்தளை மனித புதைகுழியில் இருந்து 154 மனித எலும்பு தொகுதிகள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment