மஹிந்தவுக்கு மிகுந்த வேதனையாம் - குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவதாகவும் தெரிவிப்பு
இலவசக் கல்வியை ஒடுக்குவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டின் இலவசக் கல்வி முறைமையை ஒடுக்கும் முயற்சிகளில் இந்த அரசாங்கம் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் உடனடியாக பதவியை ராஜினாமா செய்யத் தயார் என ஜனாதிபதி அறிவித்தார் என, கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இலவசக் கல்வி முறைமையை ஒடுக்குவதற்கு மனதளவில் கூட நினைத்ததில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டதாக, அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் இலவசக் கல்வி முறைமையை ஒடுக்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து உடன்படிக்கை கைச்சாத்திட்டதாக சுமுத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், ஜனாதிபதி பதவியைத் துறக்கத் தயார் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் இந்தக் குற்றச்சாட்டு ஜனாதிபதியை மிகுந்த வேதனையடையச் செய்துள்ளதாக அமைச்சர் குணவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரதியை ரணில் விக்ரமசிங்க ஊடகங்களுக்கு அம்பலப்படுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் இளைய தலைமுறையினர் மீது அன்பு கொண்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்ன தெரிவித்துள்ளார்.
Post a Comment