குவைத்தில் நீச்சல் உடை அணிந்த தாயிடம் இருந்து குழந்தைகள் பறிப்பு
நீச்சல் ஆடை அணிந்ததால் குவைட் நாட்டு பெண் ஒருவர் தனது குழந்தைகளை வளர்க்கும் உரிமையை இழந்துள்ளார்.
குறித்த பெண் நீச்சல் ஆடையுடன் உறுவுமுறை அற்ற ஆண்; ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை அவரது முன்னாள் கணவன் நீதிமன்றத்தில் காட்டி அவரால் குழந்தைகளை வளர்க்க தகுதியில்லை என்று வாதாடியதை அடுத்து அந்நாட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
"எனது கட்சிக்காரர் தனது குழந்தைகளுக்கான பாதுகாவலர் பொறுப்பை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஏனெனில் குழந்தைகளின் தாய் அந்த பொறுப்புக்கு நம்பிக்கையற்றவராக உள்ளார்" என்று தந்தையின் வழக்கறிஞர் யு+சுப் ஹ{ஸைன் குறிப்பிட்டுள்ளார்.
"அவரது வாழ்க்கை முறை பொறுத்தமற்றது என்பதை காட்டும் புகைப்பட ஆதாரத்தை எனது கட்சிக்காரர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்" என்று அந்த வழக்கறிஞர் உள்ளுர் நாளாந்த பத்திரிகையான அல் ராய்க்கு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தாய் நீச்சல் உடையுடன் இருக்கும் புகைப்படம் வெளிநாடு ஒன்றில் வைத்து எடுக்கப்பட்டிருப்பதாக அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
Post a Comment