நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் - 'சிலோன் ருடே' தகவல்
2015ம் ஆண்டு ஜனவரியில் நடத்துவதற்கு உத்தேசிக்கபட்டிருந்த ஜனாதிபதித் தேர்தலை முற்கூட்டியே எதிர்வரும் நவம்பரிலேயே நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அரச உயர்வட்டாரங்களை மேற்கோள்காட்டி 'சிலோன் ருடே' ஆங்கில நாளிதழ் இன்று 30-05-2015 தலைப்புச் செய்தி வெளியிட்டிருக்கின்றது.
இது தொடர்பாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அதன்படி புதிய ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை அரசு ஓகஸ்ட் மாதத்தில் வெளியிட்டதும் அத் தேர்தலுக்கான திகதியை தேர்தல் ஆணையாளர் விடுப்பார்.
தற்போதைய அரசமைப்பின்படி, ஜனாதிபதி ஒருவர் தமது ஆறாண்டு பதவிக் காலத்தில் முதல் நான்கு ஆண்டுகள் முடிந்த பின்னர் எந்தச் சமயத்திலும் முற்கூட்டித் தேர்தலுக்கு உத்தரவிட முடியும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் 2010 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்றது. எனினும் அத்தேர்தல் வெற்றி மூலம் கிடைத்த தமது புதிய பதவியை 2010 நவம்பரில்தான் ஜனாதிபதி ஏற்றிருந்தார். ஆகவே அவரது தற்போதைய பதவிக் காலத்தின் முதல் நான்கு ஆண்டுகள் 2014 நவம்பரில்தான் முடியும்.
தற்போதைய அரசமைப்பு ஏற்பாடுகளின்படி, இனி ஜனாதிபதித் தேர்தலை முற்கூட்டியே நடத்துவதாயின் அதற்காக 2014 நவம்பர் வரை ஜனாதிபதி ராஜபக்ச காத்திருக்க வேண்டும்.
அதன் பின்னரே புதிய தேர்தலுக்கான அறிவிப்பை அவர் விடுக்க முடியும். அப்படி அறிவிப்பு விடுக்கப்பட்டால் அதற்குப் பிறகு, 2015 ஜனவரிக்குப் பின்னர்தான் அத்தேர்தல் சாத்தியமாகும்.
இந்நிலையில் ஊவா மாகாண சபைத் தேர்தல் பற்றிய அறிவிப்பு ஜூனில் வெளியாகி அத்தேர்தல் ஓகஸ்டில் நடத்தி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அது ஓகஸ்டில் முடிவடைந்த கையோடு புதிய ஜனாதிபதித் தேர்தலுக்கு அறிவிப்பு விடுத்து, நவம்பரில் அத்தேர்தலையும் நடத்தி முடித்துவிட அரசு விரும்புகின்றது.
அப்படி முற்கூட்டியே தேர்தலை நடத்துவதாயின் அதற்கென மீண்டும் ஓர் அரசமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். அது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படவும் வேண்டும்.
தற்சமயம் அத்தகைய பெரும்பான்மை ஆதரவு நாடாளுமன்றத்தில் தனக்கு இருப்பதாகக் கருதும் அரசு, அதன் மூலம் அந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றி, ஜனாதிபதித் தேர்தலை முற்கூட்டியே நடத்த எண்ணியுள்ளது என்கிறது அந்த ஆங்கில நாளிதழ்.
அதேசமயம் ஊவா மாகாண சபைத் தேர்தல், உத்தேச ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றை முன்னிட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பல்வேறு திட்டங்களை அறிவிக்கவும் அரசு விரும்புகின்றது என்றும் அந்த நாளிதழ் தெரிவித்தது.
இதற்காக, பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரித்தல், தற்காலிக மற்றும் சமயாசமய ஊழியர்களைப் பணி நிரந்தரமாக்குதல், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் உரம் மற்றும் எரிபொருள் பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளித்தல், மின் கட்டணத்தைக் குறைத்தல் என்பன உட்படப் பல விடயங்கள் குறித்து திறைசேரிச் செயலாளருடன் தொடர் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன எனவும் கூட அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
Presidential polls in November
0 May 30, 2014 2:05 am
The Presidential Election, which was to be held in January 2015, according to auspicious times, has now been advanced to November this year, a highly placed internal government source said.
Accordingly, the Elections Commissioner will fix a date for the election once the government officially announce the date of the election in August. The Constitution allows the President to go for an election after completing four years... ...in office and if the Executive President plans to go for a presidential election before the lapse of the four–year term it should be done, by a constitutional amendment that requires a two thirds majority.
Legal experts have opined that the government should announce the election as soon as the Uva Provincial Council ends in August. The official announcement for the Uva Provincial Council will be made in June.
It is also said that the government is planning a massive relief package to be granted to the public in view of the upcoming Uva Provincial Council Election and the Presidential Election.
A series of discussions, headed by the Treasury Secretary, is being held to decide on increasing the salaries of the public sector employees, job confirmation of casual workers, resolving fertilizer and fuel issues of the farmers and the fishermen and reducing electricity prices as parts of these relief packages.

Post a Comment