Header Ads



இலங்கையின் பெண் பொலிஸாருக்கு புதிய சீருடை


பெண் காவல்துறையினர் தற்போது அணியும் சீரூடைகளுக்கு மேலதிகமாக மற்றும் ஒரு சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

காவற்துறை மா அதிபரினால் பரிந்துரை செய்யப்பட்ட யோசனைக்கு, நீதி மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சு அனுமதியளித்துள்ளதாக அந்த தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், பெண் காவற்துறை சார்ஜண்ட் மற்றும்  கான்ஸ்டபிள்களுக்கான   புதிய சீருடை, நீள் காற்சட்டை மற்றும் மேலாடையாக அமையும் என தெரிவிக்கப்பட்டள்ளது.

பெண் காவற்துறை பரிசோதகர் மற்றும் உதவி காவற்துறை அதிகாரிகளுக்கு நீள் காற்சட்டை மற்றும் புஸ் கோட் வழங்கப்படவுள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கர்ப்பிணி காவற்துறையினருக்காக புதிய சீருடை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் காவல்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

1 comment:

  1. This is a good move,,.. Women dressing to cover more of the body... A good move.. Which the "Religion of Peace" already commanded 1400 years ago.

    ReplyDelete

Powered by Blogger.