நோன்பிற்கு முஸ்லிம்களுக்கு வந்த பேரீத்தம் பழம், சிங்களத்-தமிழ் புத்தாண்டில் விநியோகம்..!
(நஜீப் பின் கபூர்)
இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு சவூதி அரேபியா வழக்கமாக நேன்பு காலத்தில் அனுப்பி வைக்கின்ற பேரீத்தம் பழம் வழக்கம் போல் இந்த முறையும் வந்து சேர்ந்திருக்கின்றது. இப்படி வந்த 200 மெற்றிக் தொன் பேரீத்தம் பழம் மிகவும் பிழையான முறையில் தவறான ஆட்களின் கைகளுக்கு வழக்கத்திற்கு மாறக சென்றடைந்திருக்கின்றது.
இது தொடர்பான தகவல்கள் தற்போது அம்பலத்திற்கு வந்திருக்கின்றது. வழக்கமாக கலாச்சார அமைச்சின் முஸ்லிம் பிரிவுக்கு வந்து சேருகின்ற இந்தப் பேரீத்தம் பழம் பள்ளிவாயில்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவை முஸ்லிம்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை குறுக்கு வழியில் இது சமூக சேவைகள் அமைச்சினால் பெற்றுக் கொள்ளப்பட்டு அவற்றை அவர்கள் தமக்கு விரும்பியவாறு பகிர்ந்தளித்திருக்கின்றார்கள்.
இது பற்றிய கேள்விகள் தற்போது எழுப்பப்படுகின்போது இது சிங்களத் தமிழ் புத்தாண்டுக்காக எமக்குக் கிடைத்தவை. இவற்றை நாம் கையேற்று மக்களுக்குப் பகிர்ந்தளித்து விட்டோம், என்று சமூக சேவைகள் அமைச்சு பதிலளித்திருக்கின்றது.
இந்த விவகாரம் தொடர்பாக முஸ்லிம் அமைச்சர்களிடத்தில் கேள்வி எழுப்பினால் அவர்கள் இது விடயத்தில் மௌனம் சாதிக்கின்றார்கள். இந்த விவகாரம் www.jaffnamuslim.com இணைத்தளத்தில் வெளிவருகின்ற போதுதான் முஸ்லிம் சமூகத்திலுள்ள அனேகம் பேருக்கு இந்தத் தகவல் தெரியவரும்.
நமது அரசியல் தலைமைகளின் சமூகத்தின் மீதான அக்கறை எப்படி இருக்கின்றது. இது விடயத்தில் என்ன நடந்தது என்பதனை நமது உலமா சபை அல்லது அரசியல்வாதிகள் நமது சமூகத்திற்கு விளக்கம் அளிப்பார்களா?
இந்தக் கடத்தல் விவகாரத்திலும் உத்தியோகப் பற்றற்ற பொலிஸ் படை பின்னணியில் இருந்திருக்குமோ என்று எமக்கு எண்ணத் தோன்றுகின்றது.
Shame... Shame on Vicked so called Muslim Ministers & MPS...
ReplyDeleteAgain, What's ACJU stand on this ?
Do Saudis Know this incident ?
Who are officials sleeping in the Muslims Cultural ministry ?
Did they take any action ?