'அரசாங்கங்கள் எவ்வாறு கவிழ்க்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ள சந்தர்ப்பம் கிட்டியது'
ஊழல் மோசடிகள், பயங்கரவாதம் தொடர்பில் கற்றுக்கொள்ள தேவையென்றால் மெதமுலனவிற்கு செல்வேன் - ரணில்
ஊழல் மோசடிகள், பயங்கரவாதம் மற்றும் அடக்குமுறைகள் தொடர்பில் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமாயின் மெதமுலனவிற்கு செல்ல முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இருப்பிடமான மெதமுலனவிற்கு சென்றால் இவ்வாறான விடயங்களையே கற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை அமைப்பது மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கற்றுக்கொள்ளும் நோக்கில் தாம் அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி அடைந்த நாடுகளின் தந்திரோபாயங்கள் பற்றி அறிந்துகொள்ளவே தாம் அமெரிக்காவின் எம்.ஐ.ரீ பல்கலைக்கழகத்திற்கு சென்றதாகத் தெரிவித்;துள்ளார்.
துறைமுகம் அமைப்பது பற்றியும், வீதிகள் அமைப்பது பற்றியும் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாணசபைகள் மற்றும் பிரதேச சபைகள் இவ்வாறான அபிவிருத்திட்டங்களை மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இருக்கும் வசதிகளை சிறந்த முறையில் பயன்படுத்தி நாட்டை முன்நோக்கி நகரச் செய்வதே தமது இலக்கு என அவர் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இ;ல்லாதொழிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் அரசாங்கங்கள் எவ்வாறு கவிழ்க்கப்படுகின்றன என்பது குறித்து அறிந்து கொள்ள தமக்க சந்தர்ப்பம் கிட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
இளைஞர் சமூகத்தின் தொழில்நுட்ப அறிவினை விருத்தி செய்து அதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய ஐக்கிய தேசியக் கட்சி உத்தேசித்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். gtn
Post a Comment