இலங்கை விவகாரத்தில் நரேந்திர மோடி, வேகமாக காலடி எடுத்து வைக்க ஆரம்பித்து விட்டார்...!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விவகாரத்தில் வேகமாக காலடி எடுத்து வைக்கத் தொடங்கி விட்டார் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலாநிதி வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பாக மன்மோகன்சிங் மெதுவாகவே காலடி எடுத்து வைத்தார். ஆனால், நரேந்திர மோடி வேகமாக காலடி எடுத்து வைக்க ஆரம்பித்து விட்டார்.
தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் அழுத்தம் இல்லாமல் இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு அழுத்தம் கொடுத்திருக்கமாட்டார். சிறிலங்கா அரசாங்கம் போட்ட கணக்கு பிழைத்து விட்டது.
உடனடியாக புதிய அரசியலமைப்பை உருவாக்கி, 13 வது திருத்தச் சட்டத்துக்கு அரசாங்கம் சாவு மணி அடிக்க வேண்டும். இல்லாவிட்டால் சிங்கள பௌத்த மக்களின் ஆதரவை இழக்க வேண்டிய நிலையேற்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மோடியின் வருகை உங்களுக்கெல்லாம் உள்பயத்தை எந்த சந்தேகமுமின்றி தோற்றுவித்துள்ளது. இனி உங்களுக்கெல்லாம் சங்குதான். மன்மோக சிங்க் ஒரு பொம்மையாகவே வைக்கப்பட்டிருந்தார் என்பது உங்களுக்கு தெறியாது,ஆதலால் அவர் மெதுவாகத்தான் காலடி வைப்பார்.
ReplyDeleteதமிழர்களுக்கு நலவு கிட்டி,இலங்கை நாட்டிலும் நல்லாட்சி கிட்டும் என்பதே உலக மக்களின் எதிர்பார்ப்பு.