Header Ads



அடுத்த தேர்தலுக்கு பின், நாட்டின் தீர்மானகரமான சக்தி எமது கட்சியே - சரத் பொன்சேக்கா

அடுத்த தேர்தலுக்கு பின்னர், நாட்டின் தீர்மானகரமான சக்தி தமது கட்சியே என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பிங்கிரிய பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்னும் மூன்று மாதங்கள் இருப்பதால், நாங்கள் தேர்தல் பிரசாரப் பணிகளை ஆரம்பிப்போம்.

கட்டாயம் அரசாங்கத்தின் சுமார் 75 ஆயிரம் வாக்குகள் பிரியும். இப்படியே சென்றால், 5 லட்சம் வாக்குகளாவது அரசாங்கத்திற்கு குறையும். அரசாங்கத்தின் இறுதிப் பயணமாக அது அமையும்.

அப்படி நடந்தால், வாழ்நாள் முழுக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் ஆட்சிக்கு வர முடியாது.

கட்சியை கட்டியெழுப்பியவர் பண்டாரநாயக்க, அந்த கட்சிக்குள் குழி பறித்தவர் மகிந்த ராஜபக்ச, இது எமக்கு கவலையை ஏற்படுத்துகிறது.

நாட்டின் அரசியல் நிலைமை எப்படி உள்ளது என்பதை எம்மால் உணர முடிகிறது. எமக்கு சுமார் 7 லட்சம் வாக்காளர்களின் ஆதரவு உள்ளது.

ஜே.வி.பிக்கும் நாடு முழுவதும் 5 லட்சம் வாக்குகள் வரை உள்ளன. எமக்கு கட்சி முன்னணியில் உள்ளது.

நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு லட்சம் வாக்குகள், முஸ்லிம் காங்கிரஸின் ஒன்றரை லட்சம் வாக்குகள், ஜே.வி.பியின் ஒன்றரை லட்சம் வாக்குகள் என்பன தீர்மானிக்கும் வாக்குகளாக இருந்ததை நாம் கண்டோம்.

அடுத்த வருடம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால், எமது கட்சியின் வாக்குகள் 10 லட்சமாக அதிகரிக்கும். எவர் போட்டியிட்டாலும் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வாக்குகள் தீர்மானகரமாவை.

ஜனநாயகக் கட்சியை மறந்து விட்டு தேர்தலில் போட்டியிட முடியாது. ஜனநாயகக் கட்சி என்பது தீர்மானிக்கும் சக்தி என்பதை அரசாங்கம் உணர ஆரம்பித்துள்ளது எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.