முஸ்லிம்களுடைய உரிமைகளையும் நாங்கள் மதிக்க வேண்டும் - அமைச்சர் சாலிந்த திசாநாயக்க
(இக்பால் அலி)
இந்நாட்டிலுள்ள சகல இன மக்களுடைய உரிமைகளையும் நாங்கள் மதிக்க வேண்டும். அதேபோல் முஸ்லிம் மக்களுடைய உரிமைகளையும் நாங்கள் மதிக்க வேண்டும். வெளிநாட்டுச் சக்திகளின் நெருக்கடிகள் தேவைகள் இலங்கை நாட்டிலும் காணப்படுகின்றன. மியன்மாரில் காணப்படுகின்ற சக்திகளின் செயற்பாட்டை ஒத்த அமைப்பிலான செயற்பாட்டு வடிவம் எமது இலங்கை நாட்டிலும் ஏற்படுத்தும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு நாங்கள் எதிரானவர்கள். நாங்கள் இடமளிக்க மாட்டோம். நாங்கள் ஒரு போதும் நட்புடன் இணைந்து வாழும் மக்களுக்கு எதிராக இனவாத ரீதியாக கிளர்ந்தெழ எவரையும் இடமளிக்க விடமாட்டோம் என்று சுதேச வைத்தியத் துறை அமைச்சர் சாலிந்த திசாநாயக் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினரும் ஊடக ஆலோசகருமான அல்ஹாஜ் ஏ. எச். எம். அஸ்வர் அவர்களுடைய பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நிர்மாணிக்கப்பட்ட குருநாகல் தித்தவெல்கால்ல மஸ்ஜிதுல் நூர் ஜும்ஆப் பள்ளிவாசலில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத் திறப்பு விழா அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிய முன்னணியின் முக்கியஸ்தர் பாரூக் தலைமையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சுதேச வைத்தியத் துறை அமைச்சர் சாலிந்த திசாநாயக் அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
ஒரு சந்தர்ப்பத்தில் குருநாகல் பள்ளிவாசலிலுக்கு நான் சென்றேன். முக்கிய பிரச்சினை ஒன்று. சிங்கள முஸ்லிம் மக்களுக்கிடையிலான பெரு முரண்பாடொன்றாகும். அப்போது அவர்கள் மிகுந்த பயந்த நிலையில் இருந்தனர். நீங்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம். நான் இந்தப் பிரச்சினை எழுதவதற்கு இடமளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்து விட்டு அந்தச் சந்தர்ப்பத்தில் சுமூக நிலையை ஏற்படுத்திவிட்டு வந்தேன்.
நாங்கள் அனைவரும் இலங்கையர்கள். அன்றைய காலத்தில் எங்களுடைய அரச படையினருடன் இணைந்து முஸ்லிம்கள் ஆலோசகராகவும் படைவீரர்களாகவும் இருந்து செயலாhற்றியுள்ளனர். அது அத்துடன் நின்று விட வில்லை. அது தொடர்ச்சியாக வந்துள்ளது. போர்த்துக் கேயர் எமது நாட்டை ஆக்கிரமித்துக் கொள்வதற்காக வருகை தந்தனர். நீங்கள் எங்கள் நாட்டுக்கு வருகை தந்து வியாபாரம் செய்வதற்காகும். இவர்கள் ஒரு குடும்ப சகிதம் வருகை தர வில்லை. ஆண்கள் மாத்திரமே இங்கு வருகை தந்தனர். இவர்கள் எங்களுடைய சிங்கள சகோதரிகளையே மணந்தார்கள். அந்த வகையில் நாங்கள் எல்லோரும் உறவினர்கள் கரையோரத்தில் வியாபாரம் செய்கையில் ஈடுபட்ட முஸ்லிம்களுக்கு எதிராக இடையூறுகளை கொடுக்க ஆரம்பித்தனர். அப்போது உடரட்ட அரசர்கள் இம்மக்களுக்காக அடைக்கலம் கொடுத்தனர்.
அன்று தொட்டு இன்று வரை டி. பீ. ஜயா, கலாநிதி பதியுதின் மஹ்மூத், அமைச்சர் பாக்கீர் மாக்கர் ஆளுநர் அலவி மௌலானா, அமைச்சர் ஏ. எச். எம். பௌசி உள்ளிட்ட எனப் பலதரப்பட்ட அரசியல் பிரமுகர்கள் எங்களுடன் சேர்ந்து நாட்டுக்காகவும் சமூகத்திற்காகவும் சேவையாற்றி வருகின்றனர். சிங்கள், தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். குறிப்பாக சமூகத்திற்கு எதிராக செயற்படும் சக்திகளுக்கு நாங்கள் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நகிழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ, எச். எம் அஸ்வர், முஸ்லிம் மீடியா போரம் அமைப்பின் தலைவர் என். எம். அமீன், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் சட்டத்தரணி ரஷPட். எம். இம்தியாஸ், சுற்றுலா மற்றும் கைத்தொழில் அமைப்பின் தலைவர் ஏ. எம். ஜவ்பர் ,பௌத்த சமயத் தலைவர்கள், மஸ்ஜிதுல் நூர் ஜும்ஆப் பள்ளிவாசலின் தலைவர் எம். எஸ். எச். இஸாக், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Allah ungaluku hidayathai nassebaakuwaanaaha Aameen....!
ReplyDelete