அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும், சட்டத்தரணி அலி சப்ரியும்..!
(அஷ்-ஷைக் ரீ.ஹைதர் அலி அல்-ஹலீமி)
சென்ற 20.05.2014 அன்று ளுடுவுது செயலாளர் புத்த மதத்தை நிந்தித்தார் என்ற குற்றச்சாட்டில் குறித்த அமைப்பைச் சேர்ந்த ஐவருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதிமன்றம் இரண்டாம் கட்ட வழக்கை பரிசீலனை செய்தது.
இந்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி சகோ. அலி சப்ரி ஆஜராகி பல கருத்துக்களை முன்வைத்துள்ளார். அக்கருத்துக்களுக்கு ஆதாரமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஊடகச் செயலாளர் வெளியிடப்பட்ட அறிக்கையை ஆதாரம் காட்டி இவர்கள் செயலுக்கு எந்தவகையிலும் அ.இ.ஜ.உ உடன்பாடில்லை, கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளார். இதனை அப்படையாக வைத்தே சிலர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஒரு சட்டத்தரணியை நியமித்திருப்பதாக பொய்ப்பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர். ஊடகங்களும் ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகளை வெளியிட்டுள்ளன என்பது கவலைக்குரிய செய்தியாகும்.
ஆனால் இது தொடர்பில் தெரியவருவதாவது:
இப்பிரச்சனை தொடர்பில் குற்றப் பிரிவு பொலிசார் ஜம்இய்யாவின் பொதுச் செயலாளரிடம் வந்து குறித்த அமைப்பின் ஐவரும் மௌலவிமார்களா? எனவும் ஜம்இய்யாவில் அவர்களின் அங்கத்துவம் பற்றியும் விசாரித்தனர். அவர்களில் ஒருவர் நளீமியாவிலும் இன்னுமொருவர் காலி அல்-பயானிலும் கல்வி பயின்றவர்கள் எனவும் இவர்கள் ஆலிம்களா என தாம் உறுதியாக அறிய வேண்டும் எனவும் கேட்டுள்ளனர். உடனே குறித்த கலாசாலைகளை அவர்கள் முன்னிலையிலேயே தொடர்புகொண்டு உண்மை விபரம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இவைகளுக்கு பதிலளிக்கும் வகையிலே தான் கீழ் கண்டவாறு கூறப்பட்டுள்ளது:
அதாவது ஜம்இய்யாவில் அங்கத்துவம் பெறுவதாக இருந்தால் அவருக்குரிய தகைமைகள் என்னவென்றும், அந்தத் தகைமைகள் இல்லாதபோது அவர்களுக்கு அங்கத்துவம் வழங்கப்பட மாட்டாது எனவும் கூறியுள்ளார்கள். மௌலவி அல்லாதோருக்கு தஃவா செய்ய முடியாது என எந்தவொரு சாதாரண மனிதனும் கூட கருத்துக் கூற முடியாது. இன்று ஆலிம் அல்லாத பல நல்ல மனிதர்கள் சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் கூட தஃவாப் பணிகளில் ஈடுபடுகிறார்கள் என்றும் நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் குறிப்பிட்டார்.
குறித்த வழக்கில் ஜம்இய்யத்துல் உலமா தலையிட ஜம்இய்யாவுக்கும், இவ்வழக்கிற்கும் எவ்வித தொடர்புமில்லை என்பது பற்றி எல்லோருக்கும் தெரியும். எனவே மேற்படி ஜம்இய்யா மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் யாவும் பொய்யாக சோடிக்கப்பட்டவைகளாகும்.
அடுத்து ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தினர் சமூகத்தின் தவிர்க்க முடியாத ஒரு அங்கம் என்ற வகையிலே தான் இன்றுவரையும் 'இன்ஷா அல்லாஹ்' எதிர் காலத்திலும் ஜம்இய்யா செயற்பட்டு வருகிறது. இதனடிப்படையிலே தான் இவர்களை கலந்தாலோசிக்க வேண்டுமெனவும் இவர்களை குறித்த சிக்கலை விட்டும் வெளியெடுக்க வேண்டும் என்ற நோக்கங்களோடும் ஜம்இய்யாவின் தலைமையகம் அவர்களை அழைத்தது. ஆனால் பல காரணங்களையும், நிபந்தனைகளையும் கூறி அவர்கள் தவிர்ந்து கொண்டனர். மட்டுமன்றி ஜம்இய்யாவின் தலைவரின் வேண்டுகோளின் பேரில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மூலம் அவர்களை ஏணைய இயக்கங்களோடு சேர்த்து ஒரு கலந்துரையாடலக்கு அழைக்கப்பட்ட போதும் அவர்கள் சமூகமளிக்கவில்லை.
அத்துடன் இவர்கள் 'நாம் எவர்களுடனும் இணைந்து செயற்படக்கூடியவர்கள் அல்லர். எமக்கென ஒரு தனிக்கொள்கை இருக்கிறது' எனக் கூறி இருப்பதே உண்மையாகும். எனவே இவ்விடத்தில் எவரும் வதந்திகளை நம்பக் கூடாதென வேண்டிக்கொள்கிறேன். ('இன்ஷா அல்லாஹ்' இது தொடர்பாக ஜம்இய்யாவின் உத்தியோகபூர்வ ஊடக அறிக்கை விரைவில் வெளிவரும்)
Onnum puriya ella .....
ReplyDelete