'இனவாத செயற்பாடுகளினூடாக தமது இருப்பை தக்கவைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆர்வம்' அமைச்சர் டிலான் பெரேரா
இந்திய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான குழுவில் கலந்து கொள்ளுமாறு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அவர் நிராகரித்துள்ளமையானது அரசியல் சுய இலாபத்தை நோக்கமாக கொண்டது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றம் நலன் நோன்புகை அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
இனவாத அடிப்படையிலான செயற்பாடுகளினூடாக தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதிலும் தொடர்வதி லுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆர் வம் காட்டி வருகின்றது. மாறாக தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதில் அவர்களுக்கு அக் கறையில்லை. இந்த நிலைமையை முத லமைச்சர் விக்னேஸ்வரனாவது மாற்றியமைக்க முயல்வார் என்று எண்ணியிருந் தோம். ஆனால் அவரும் பிரிவினைவாதத் தின் மூலம் அரசியலை தொடர்வதையே விரும்புகிறார் என்பது தற்போது வெளிப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் அவ்விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்தார். ஆனால்இ அந்த அழைப்பை விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார். இது மிகவும் தவறான முடிவாகும்.
ஜனாதிபதியின் முன்நிலையில் சத்திய பிரமாணம் செய்துகொள்ள முடியுமானால் ஏன் அவருடனான இந்திய விஜயத்தை நிராகரிக்க வேண்டும். எனவே விக்னேஸ்வரனும் சாதாரண பிரிவினைவாத அரசியல்வாதியொருவரே என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
இனவாத மற்றும் பிரிவினைவாத செயற்பாடுகளை முன்னெடுத்தால் தொடர்ந்தும் வடக்கில் வெற்றிபெற்று அரசியலை தொடரலாம் என்ற எண்ணம் விக்னேஸ்வரனுக்கும் தற்போது வந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. அதனால் தான் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் பெரிதாக அக்கறை காட்டாமல் பிரிவினைவாத செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்.
மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி வேறு மாகாணங்களில் உள்ள முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் வட மாகாண முதலமைச்சருக்கு மாத்திரமே அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நல்ல சந்தர்ப்பத்தை விக்னேஸ்வரன் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை எனவே, அவரது அரசியல் சுய இலாபம் கொண்ட செயற்பாடு வெளிப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மோடியின் பதவியேற்பின் பின்னர் அவரை சந்திக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால் ஜனாதிபதியுடன் சென்று அவ ரை சந்திப்பதை நிராகரித்துள்ளார்கள். முதலிலிருந்து அவர்களின் பிரிவினைவாத செயற் பாடுகளை தெளிவாக காண முடிகிறது. விக்னேஸ்வரன் அப்படியான ஒருவ ரல்ல. நல்லிணக்கத்தையும் ஐக்கியத்தையும் விரும்புபவர் என்றே நினைத்திருந்தோம். ஆனால் அவரும் ஏனைய சாதாரண அரசி யல்வாதிகளை போன்றவர் என்பதை நிரூபித் துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.
ஏன் விக்னேஸ்வரன் அவர்களை மட்டும் ஜனாதிபதி அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும்? இது முழுமையாக இந்தியாவையும் தமிழ் மக்களையும் ஏமாற்றும் மிகவும் ஒரு கீழ் மட்டமான ராஜபக்சவுக்குரிய அரசியலாகும்.
ReplyDeleteKuruvi சொல்றது போல அரபு நாடுகளுக்கு போகும் போது முஸ்லிம்களைக்கூட்டி கொண்டு போவதைப்போல. இந்தியவுக்கு போகும் போது தமிழ் தலைவனொருவரை கூட்டிக்கொண்டு செல்ல நினைத்தால அது முடியுமா. தமிழன் ஒருபோதும் அதற்கு தலைசாய்க்க மாட்டான். கூட்டிக்கு போறவன் கூடப்போறவன பற்றி என்ன நினைக்கிறானோ ஒன்றும் புரியல.
ReplyDeleteஏன் சம்பிக்க ரணவக்கவை அல்லது இன்னும் சில இனவெறியன்கள் இருக்கின்றாங்களே அவங்களை கூட்டிக்கொண்டு போகலாம் தானே.