கம்பளை அல்-மினா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கொள்ளை
(அஸ்-ஸாதிக்)
கம்பளை அல்-மினா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 25.05.2014 நேற்றிரவு ஐம்பதாயிரம் ரூபாவுக்கும் மேற்பட்ட ஒவிபெருக்கி இயந்திரங்களும் ஏழாயிரம் ரூபா ரொக்கப் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் அதிபர் அலுவலகத்தின் கதவை உடைத்துக் கொண்டு புகுந்த கொள்ளையர் குழு அலுவலகத்தில் இருந்த பாடசாலையின் ஒலிக்கட்டமைப்பு சாதனங்கள் மற்றும் ஆசிரியையொருவரின் ஏழாயிரம் ரூபா ரொக்கப் பணத்தையும் கொள்ளையிட்டுள்ளனர்.
மேலும் அலுவலகத்தில் இருந்த ஐந்து அலுமாரிகளும் கொள்ளையர்கள் உடைத்து நாசப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இவற்றில் இருந்த பாடசாலை ஆவணங்களிலும் தேடுதலை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பாடசாலை அதிபர் திருமதி எப். நஜீபா கம்பளை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிசார் விசாரனைகளை மேற்கொண்ட வருகின்றனர்.
Post a Comment