55 முஸ்லிம் போராளிகளுக்கு திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில் மரண தண்டனை (படங்கள்)
சீன அரசின் பார்வையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக, சீனாவின் வட மேற்கு பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் சிறுபான்மையினர், 55 பேருக்கு, திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஜின்ஜியாங் என்ற மாகாணம், சீனாவின் வட மேற்கு பகுதியில் உள்ளது. பல நுாறு ஆண்டுகளுக்கு முன், துருக்கி நாட்டிலிருந்து, அந்த எல்லையோர பகுதிகளில் குடியேறியவர்கள், உய்குர் இன முஸ்லிம்கள்; இவர்கள், அந்த பகுதியில், 45 சதவீதம் உள்ளனர். உய்குர் முஸ்லிம்கள் வாழும் இடங்களில், சீன பழங்குடியின மக்களான ஹான் இனத்தவர், கடந்த சில ஆண்டுகளாக வலுக்கட்டாயமாக குடியமர்த்தப்படுவதால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
கைது செய்யப்பட்ட, 55 உய்குர் முஸ்லிம்கள் நேற்று, ராணுவ லாரிகளில், விளையாட்டு மைதானம் ஒன்றுக்கு கொண்டு வரப்பட்டனர். ஆரஞ்சு உடையணிந்திருந்த அவர்களுக்கு, மைதானத்திலேயே மரண தண்டனை விதிக்கப்பட்டது; இதை, மைதானத்தில் இருந்த, 7,000 பேர் பார்த்தனர்.
சீனாவில், 1960 - 70ம் ஆண்டுகளில், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள், அரசுக்கு எதிராக பேசுபவர்களை, இப்படி மொத்தம் மொத்தமாக, திறந்தவெளி அரங்குக்கு அழைத்து வந்து, தண்டனை விதிப்பது வழக்கம். சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த அந்த பழக்கம், உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக சமீப காலமாக பயன்படுத்தப்படுகிறது.
Post a Comment