சவூதி அரேபியாவில் 17 மணி நேர ஆபரேஷன் மூலம் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் பிரிப்பு
ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளை 9 கட்ட தொடர் ஆபரேஷனின் மூலம் சவூதி அரேபியாவை சேர்ந்த டாக்டர்கள் வெற்றிகரமாக பிரித்தெடுத்துள்ளனர்.
தலைநகர் ரியாத்தில் உள்ள மன்னர் அப்துல் அஜீஸ் ஆஸ்பத்திரியில் இந்த ஆபரேஷன் நடைபெற்றது. சவூதியின் முன்னாள் சுகாதாரத் துறை மந்திரி டாக்டர் அப்துல்லா அல் ராபியா தலைமையிலான டாக்டர்கள் குழு சுமார் 17 மணி நேரம் இந்த சிரமமான ஆபரேஷனை நடத்தியதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இரண்டுமே ஆண் குழந்தை என்பதால், ஒரு குழந்தை மட்டும் பிறப்புறுப்புடன் பிரித்தெடுக்கப்பட்டதாகவும், மற்றொரு குழந்தை பிறப்புறுப்பு அற்ற நிலையில் உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
Post a Comment