ஞானசார தேரருடன் விவாதிக்க தவ்ஹீத் ஜமாஅத் TNL இடம் வாய்ப்பு கேட்கிறது
கடந்த 13.04.2014 மற்றும் 15.04.2014 அன்று டீ.என்.எல். தொலைக் காட்சியின் “பிபிதீம” நிகழ்ச்சியில் பொதுபல சேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞான சார தேரர் பங்குபற்றினார்.இதில், ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் அப்துர் ராஸிக் அவர்களினால் நிகழ்த்தப்பட்ட விமர்சன உரையில் ஓரிரு கட்டங்களை எடுத்துக் காட்டி ஞானசார விமர்சிப்பதோடு, பௌத்த – முஸ்லிம் இனமுறுகளை தூண்டும் விதமாக கருத்துத் தெரிவித்தும் உள்ளார்.
இனவாதத்தை தூண்டும் விதமாய், எமது தரப்பு கருத்தை கேட்காது பக்கச்சார்பாய் நிகழ்ச்சி நடாத்தும் டீ.என்.எல். தொலைக்காட்சிக்கு எம்மால் அனுப்பப்பட்ட மறுப்புக் கடிதத்தை வாசகர் பார்வைக்கு இங்கே பதிவிடுகிறோம். எமது கருத்தை சொல்வதற்கு சந்தர்ப்பம் தருவதோடு, பகிரங்க விவாதத்திற்கான ஏற்பாட்டையும் செய்யுமாறு கோரியே இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்கடிதத்தை எமது ஜமாஅத் நிர்வாகிகள் டீ.என்.எல். தொலைக்காட்சிக்கு நேரடியாக சென்று இன்று (16.04.2014) ஒப்படைத்ததுடன் மேலதிகமாக பதிவுத் தபாலிலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்ற பெயரில் உரிய முறையில் பதிலலிக்க முடியாதவர்களை வைத்து நாடகமாடாமல் தக்க சான்றுகளுடன் தைரியமாக, வீரியமாக வாதங்களை முன் வைக்கக் கூடியவர்களுக்கு முன்னால் இனவாதிகள் விவாதிக்கத் தயாராக இருந்தால் நமது அழைப்பை ஏற்றுக் கொள்ளுமாறு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை முன் வைத்துள்ளது. அதற்கு டீ.என்.எல். தொலைக்காட்சி பதிலளிப்பார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
Anja nenjam konda ACTJ waalha. Insha allah u will get a chance to debare. Also ur side is having power to debate
ReplyDelete