O/L பெறுபேறுகளை மீளாய் செய்வதற்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி நீடிக்கப்படாது
(எம்.எம்.ஏ.ஸமட்)
2013 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த பரீட்சைப் பெறுபேறுகளை மீளாய் செய்வதற்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி நீடிக்கப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
பரீட்சைப் பெறுபேறு மீளாய்வுக்காக விண்ணபிப்பதற்கான இறுதித் திகதி ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி என பரீட்சைத் திணைக்களத்தினால் முன்னர் அறிவிக்கப்பட்;டது. இத்திகதிக்கு முன்;னர் பெறுபேறுகளை மீளாய்வு செய்ய விரும்பும் மாணவர்கள் பரீட்சைத் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட நியதிகளுக்கமைய விண்ணபிக்க வேண்டுமென கோரப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம,; பாடசலைப் பரீட்சார்த்திகள் தங்களது மீளாய்வுக்கான விண்ணப்பங்களை பாடசாலை அதிபரினூடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் சுயமாகவும் பரீட்சைகள் திணைக்களத்திற்கு இம்மாதம் 25ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டுமெனவும் இவ்விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்படாது எனவும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் ஜயந்த புஷ்பகுமார அறிவித்துள்ளார்.
இதேவேளை, இரு வராங்களுக்கு முன்னர் வெளியான 2013 ஆம் ஆண்டின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்; அடிப்படையில் இப்பரீட்சைக்குத்தோற்றிய 474,834 பரீட்சார்த்திகளில் 192,274 பரீட்சார்த்திகள் க.பொ.த உயர்தரம் கற்பதற்குத் தகைமை பெற்றுள்ளதுடன் இவர்களில் 184,317 பேர் பாடசாலைப் பாரீட்சார்த்திகளாவர்.
அத்துடன், 5790 பரீட்சார்த்திகள் சகல பாடங்களிலும் 'ஏ' சிறப்புச் சித்தியினைப் பெற்றதுடன் 10,360 பேர் சகல பாடங்களிலும் சித்திபெறத் தவறியுள்ளமையும் இவர்களில் 9,787 பேர் பாடசாலைப் பரீட்ச்சார்த்திகள் என்பதும் குறிப்பிடத்தக்கது..
Post a Comment