Header Ads



முசலி, சிலாவத்துறை விளையாட்டு மைதானம் புனரமைப்பு பணிக்கு சமூக ஆர்வலர் நிதி உதவி


யுத்தத்தால் நேரடியாக பாதிக்கப்பட பிரதேசங்களில் வடமாகாணத்தின் முசலிப்பிரதேசம் முக்கிய பகுதியாகும். வடமாகாணத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பகுதியாக முசளிப்பிரதேசம் காணப்படுகிறது. 2009 யுத்த முடிவின் பின்னர் அதிகமான முஸ்லிம்கள் வடக்கில் மீள்குடியேறி வரும் நிலையில் பல்வேறு பிரச்சினைகளையும் சிரமங்களையும் எதிர்கொள்கிறார்கள். இந்தவகையில் கல்விப்பிரச்சினையும் முக்கியமான ஒன்றாகும்.  மன்னார், முசலி பிரதேச சபைக்குட்பட்ட சிலாவத்துறை பாடசாலை பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகிறது. குறிப்பாக கட்டிட வசதிகள்,  உள்ளக தளபாட வசதிகள் போன்றவை குறைபாடாக உள்ளது. 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இங்கு இல்ல விளையாட்டு போட்டி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. பாடசாலை மைதானம் மாணவர்களின் விளையாட்டு போட்டி நிகழ்சிகளுக்கு மிகவும் பொருத்தமற்றதாக காணப்படுகிறது. பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் அழைப்பை ஏற்று பிரதம அதிதியாக அங்கு வருகைதந்திருந்த  சமூக ஆர்வலர் முனாஸ் அரபாத் காசிம் அவர்கள் பாடசாலை மற்றும் அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க மேற்படி மைதானத்தை முழுமையாக புனர் நிர்மாணம் செய்துதருவதாக வாக்குறுதி வழங்கியிருந்தார். அதற்கிணங்க தற்போது, முதற்கட்டமாக,  சுமார் 1.4 மில்லியன் ரூபாய் செலவில் மேற்படி மைதானத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கு அரபாத் காசிம் அவர்கள் முன்வந்துள்ளதோடு அதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் கடந்த வியாழக்கிழமை 03-04-2014 இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதில் சிலாவத்துறை போலிஸ் நிலைய அதிகாரி பிரதம அதிதியாக கலந்துகொண்டதோடு பள்ளி நிர்வாகத்தினர், செஸ்டா அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

அரபாத் காசிம் மன்னார் சிலாவத்துறையை பிறப்பிடமாகக் கொண்டவர். அவர் கடந்த 14 வருடங்களாக நியுஸ்லாந்தில் வாழ்ந்து வருபவரும் தற்போது கிவி வங்கியில் பனிபுரிந்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு முஸ்லிகளின் துயர் துடைப்புக்காக பல்வேறு சமூக பணிகளில் இவர் உதவி வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் அவரது சேவைகளை பொருந்திக்கொள்வானாக. அவரைப் போன்று இன்னும் பல நல்லுள்ளங்கள் முன்வந்து உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பது  பாதிக்கப்பட்ட மக்களினதும் எல்லோரதும் அவாவாகும்.

No comments

Powered by Blogger.