Header Ads



பலசேனாக்களின் குழப்பம்..!

(திவயின -13/04/2014
தமிழில் -ஹரீஸ் ஸாலிஹ்)

வடறக்க விஜித்த தேரரின் தலைமையில் "ஜாதிக பலசேனாவ" எனும் அமைப்பொன்றினூடக கடந்த புதன் கிழமை கொழும்பு கொம்பனித்தெருவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் நடாத்தப்பட இருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றுக்குள் நுழைந்த பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்ட கும்பலொன்று அங்கு குழப்பமொன்றை ஏற்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் ஆரம்பிக்க முன்னரே அதனை கலைத்தது பற்றி பல அரசியல் கட்சிகள் உட்பட ஜன நாயகத்தை ஆதரிக்கும் பலரதும் கடும் விமர்சனத்து க்கு உள்ளாகியுள்ளது.

தேசீய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் இனவாத அமைப்புக்களைப் பற்றி கருத்து தெரிவிக்கவே இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்ததாக வடறக்க விஜித்த தேரர் தெரிவிக்கிறார் .முஸ்லிம் மதத் தலைவர்கள் சிலரும் இதில் கலந்து கொள்ள வந்திருந்தனர். ஆனாலும் இந்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட முன்னரே அவ்விடத்துக்குள் புகுந்த இந்த கும்பல் நடந்து கொண்ட விதத்தின் கானொளிகள் தொலைக்காட்சி மற்றும் இணையத் தளங்களினூடக  இலங்கைக்கு மாத்திரமல்லாது முழு உலகத்துக்கும் கண்டு கொள்ளக் கிடைத்தது

"வாயை மூடு .முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடு. ஷட் அப் .மறக்கலயர்களுக்கு வக்காலத்து வாங்க முன் பெளத்தருக்கு வக்காலத்து வாங்கி விட்டிரு .இவனுக்கு உடை கொண்டு வாருங்கள் .மறக்கலயர்களுக்கு என்ன பிரச்சினை இந்த நாட்டில்". இவை ஞானசார தேரரால்  அச்சந்தர்ப்பத்தில்  விஜித்த தேரருக்கும் முஸ்லிம் மத குருமாருக்கும் ஏசப்பட்ட வைகளில் இங்கு குறிப்பிடப்பட முடியுமான சில மாத்திரமே

இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த விஜித்த தேரருக்கோ அல்லது முஸ்லிம் மத குருமாருக்கோ ஒரு சொல் கூட பேச  விடாது அச்சுறுத்தும் விதத்தில் தூற்றிய ஞானசார தேரரின் செயற்பாடு மரியக்கடை காடையனொருவனின் அடாவடித்தனத்தை ஒத்ததாக இருந்ததென்று அக்காட்சிகளை தொலைக்காட்சிகளில் பார்த்த பலரும் கூறினர்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சட்ட யாப்பின் 14(1) பகுதியில் "அனைத்து குடி மகனுக்கும் (அ ) மொழிச் சுதந்திரம் உட்பட கருத்து தெரிவிக்க சுதந்திரம், (ஆ ) அமைதியாக ஒன்று கூடும் சுதந்திரம், (இ ) சேர்ந்து வாழ சுதந்திரம் என்பனவற்றுக்கு  உரிமை உள்ளது " என குறிப்பிடப்பட்டுள்ளது .

இதன் பிரகாரம் வடறக்க விஜித்த தேரருக்கு மாத்திரமல்லாது அனைத்து குடி மகனுக்கும் தத்தமது கருத்து தெரிவிக்க உரிமை கொடுக்கப்பட்டுள்ளது ."ஜாதிக பலசேனாவ" கூட இந்த உரிமை  அடிப்படையிலேயே இந்த  ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது .பொது பல சேனாவுக்கும் தமதுஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு பதில் அளிப்பதை விட்டு விட்டு இவ்வாறான ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கை களில் ஈடுபட்டு அதை குழப்புவதல்ல .

சிங்கள இனத்துக்காகவும் பௌத்த உரிமை களுக்காகவும் சண்டை இடுவதாக கூறிக்கொண்டு சட்டத்தை தனது கையில் எடுத்துக்கொண்டிருக்கும் காடையர்கள் போல் நடந்து கொள்ள பொது பல சேனாவுக்கு மாத்திரமல்ல எந்த ஒரு சேனாவுக்கும் உரிமை  இல்லை.அப்படிச் செய்து  சிங்களவர்களுக்கு மத்தியிலும் பௌத்தளுக்கு மத்தியிலும் வீரனாக முடியுமென்று யார் சரி நினைப்பதாயின் அது ஒரு ஏமாற்றம் தவிர வேறில்லை .

சிங்கள இனத்தினதும் பௌத்தர்களின் உரிமைகளுக்காவும் குரல் கொடுத்த மிக்கெட்டுவத்தே குணானந்த தேரர் ,வாரியபொல சுமங்கல தேரர் ,திபெத் நாட்டை சேர்ந்த எஸ் .மஹிந்த தேரர் மற்றும் திரு அநகாரிக்க தர்மபால போன்ற பௌத்த தலைவர்களைப் பற்றி நாம் ஆராய்ந்துள்ளோம் .ஆனாலும் அவர்களில் எவரும் சட்டத்தை கையில் எடுத்துகொண்டு அடாவடித்தனம் புரிந்ததாக தெரியவில்லை .

'ஜாதிக பலசேனா ' விற்குள் புகுந்த 'பொது பலசேனா ' ஊடக சந்திப்பை கலைத்தது மாத்திரமல்லாது வடறக்க விஜித்த தேரரின் காவி உடையை கலட்டுவதாகவும் அச்சுறுத்தி சிங்களவர்களிடமும் பௌத்தர்களிடமும்  மன்னிப்புக் கேட்குமாறு வலியுறுத்தி நின்றனர்.

மரணத்துக்கு பயந்த விஜித்த தேரர் "நான் புத்த சாசனத்தையும் சிங்கள இனத்தையும் காட்டி கொடுத்துவிட்டேன் .அதற்காக வேண்டி நான் இந்த நாட்டின் சிங்கள மக்களிடமும் பௌத்தர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் "என்று பயந்த முகத்துடன் தெரிவித்தார் .
இவை அனைத்தும் நடந்தது கொம்பனித்தெரு பொலிசினதும் அதன் உயர் அதிகாரியின் முன்னிலையிலுமே .'ஜாதிக பலசேனா' அமைப்பு இந்த ஊடக சந்திப்பை நிகழ்த்த இந்த ஹோட்டலுக்கு பணம் செலுத்தி ஒதுக்கியிருப்பதால் அதற்கு இடமளிக்குமாறு ஒரு பொலி ஸ் அதிகாரி வேண்டிக்கொண்ட போதிலும் கூட  ஞானசார தேரர் அதனை சிறிதும் பொருட்  படுத்தாது தன்னை கைது செய்யுமாறு பொலிசுக்கு சவால் விடுத்தார் .
 
இறுதியாக பொலிஸ் பாதுகாப்புடன் வடரக்க விஜித்த தேரர் உற்பட்ட குழு வெளியாகியது .பின்னர் அவர் கொம்பனித்தெரு பொலிசுக்கு சென்று , தான் மரணத்துக்கு பயந்ததனால் அச்சந்தர்ப்பத்தில் மன்னிப்பு வேண்டி நின்றதாகவும் பொது பல சேனா தன்னிடமிருந்த பத்திரங்களை களவாடியதாகவும் புகார் செய்திருந்தார் .
 
இந்நிகழ்வு புதன் இரவிலும் வியாழக் கிழமையிலும் ஊடகங்களில் வெளியான பின் ஏப்ரல் 12 ஆம் திகதி விஜித்த தேரரின் புகார் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ள பொலிசுக்கு வருமாறு கொம்பனித்தெரு பொலிஸ் ஞானசார தேரருக்கு அறிவித்து இருந்தது.
'ஜாதிக பலசேனா ' வின் ஊடக சந்திப்பில் புகுந்து நாட்டின் தேசிய ஒற்றுமைக்கும் ஜனநாயகத்துக்கும் பலத்த பிரச்சினைக்குறிய நிலைமையை உருவாக்கிய   'பொது பலசேனா' மோசமானதொரு காரியத்தை செய்துள்ளது  என்று JVP தனது ஊடக அறிக்கையில் அறிவித்துள்ளது.
 
"இங்கு பொது பலசேனா அமைப்பின் பிரதிநிதிகள் அவ்விடத்துக்கு சமூகம் கொடுத்திருந்த தேரர்கள் உட்பட்ட குழுவினரை தூற்றியதும் விரட்டியதும் வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைப்பதற்காக எடுக்கப்பட்ட அனைத்து அத்துமீறல்களும் நடந்தது பொலிஸ் அதிகாரிகளின் பிரசன்னத்திலேயே.
 
எல்லா அமைப்புக்களும் இவ்வாறாக செயற்பட ஆரம்பித்தால் நாட்டில் ஏற்படும் நிலை என்னவாகும் . மூன்று தசாப்த்தங்களுக்கு  மேலான யுத்த சூழ்நிலை ஒன்றின் பின் தேசிய ஒற்றுமை பற்றிப் பேசப்பட வேண்டிய நிலைமையில் இலங்கை குடிமக்களை இன ரீதியாகவும் மத ரீதியாகவும் ஒருவரை ஒருவர் தூரமாக்கும் இவ்வாறான செயற்பாடுகளை கடுமையாக கண்டிக்கிறோம் " என்று  JVP தனது அறிக்கையில் மேலும் அறிவிக்கிறது.
 
பொலிஸ் அதிகாரிகளுக்கு முன்னிலையில் இவ்வாறான அத்து மீறல்களை நடத்தி குழப்பங்களை உண்டு பண்ணிக்காட்ட தனி மனிதர்களுக்கோ அல்லது அமைப்புக்களுக்கோ முடியுமாயிருப்பது அரசாங்கத்தால் அதற்கு கிடைக்கும் அனுசரனையே அன்றி வேறில்லை என்று குறிப்பிடும் JVP யினர் ஜனநாயகத்துக்கு கேடு விளைவிக்கும் ,தேசிய ஒற்றுமையை சீர்குலைய வைக்கும் இவ்வாறான தன்னிச்சையான செயற்பாடுகளை தடுக்க அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டி நிற்பதாகவும் குறிப்பிடுகிறது.

பொது பலசேனா வினால் ஏற்படுத்தப்பட்ட இந்த நிகழ்வுக்கு அரசாங்கம் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தேசிய ஐக்கிய கட்சி தலைவரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான திரு. கபீர் ஹாஷிம் குற்றம் சாட்டினார் .இதன் முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிடுகிறார்.
 
பயங்கர வாதத்திலிருந்து சுதந்திரமாக்கிக்கொண்ட நாட்டினுள் தேசிய ஒற்றுமை ,அமைதி வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் திரும்பவும் இனவாதத்துக்கு வழி செய்யும் இவ்வகையான நிகழ்வுகளை அனுமதிக்க முடியாதென்றும் பொது பலசேனா இதற்கு முன்னறும் இவ்வாறு நடந்து கொண்டிருப்பதாகவும் கூறும் கபீர் ஹாஷிம் அவர்கள் இந்த சூழ்நிலையில் அரசாங்கத்துடன் இருக்கும் முஸ்லிம்களை பிரதிநிதிப் படுத்தும் அமைச்சர்கள் செயற்படும் விதத்தை கண்டிப்பதாகவும் கூறி நின்றார்கள் .
 
தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் திரு வாசுதேவ நானாயக்கார பொது பலசேனா பற்றி கருத்து தெரிவிக்கையில் 'அரசாங்கம் அரசாங்கமாக ' இருக்குமேயானால் இவ்வாறான அமைப்பொன்று இவ்வாறு செயற்படுவதை சும்மா பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா என வினவுகிறார் .சட்டத்துக்கு மேலாக செயற்டுவதற்கு பொது பலசேனா வுக்கு சக்தி இல்லை எனவும் அமைச்சர் தெரிவிக்கிறார் .

இவ்வாறான செயற்பாடுகள் இதற்குப் பிறகும் நடப்பதற்கு விடப்பட்டால்  எதிர்காலத்தில் இலங்கை சட்டம் எதுவும் இல்லாத நாடொன்றாக மாறுவது தடுக்கப்பட முடியாது என்பதில் சந்தேகமில்லை.

No comments

Powered by Blogger.