Header Ads



கத்தார் வாழ் இஸ்லாமிய சகோதரர்களுக்கு இஸ்லாத்தை அறிந்து கொள்ள மற்றுமோர் வாய்ப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

வெளிநாட்டில் வாழும் நாம் இழந்தவைகள், தியாகம் செய்தவைகளின் பட்டியல் நீண்டது. அவற்றில் முக்கியமான ஒன்று வாராந்த குத்பா, விஷேட பயான் என எமது ஈமானிய உணர்வுகளுக்கு உரமூட்டும் உபதேசங்களை இழந்ததாகும். 

ஈமானிய உணர்வுடன் நேரகாலத்துடன் குத்பா கேட்க பள்ளிக்குச் சென்றாலும் பாஷை புரியாததால் காதிருந்தும் செவிடர்களாய் இருந்து விட்டு வருகின்றோம். நாட்டில் இருந்து வந்தால் மீண்டும் ஒன்று அல்லது இரண்டு வருடம் கழித்தே ஒரு உபதேசம் கேட்கும் துர்ப்பாக்கிய நிலை நிறையப்பேருக்கு உள்ளது. 

வெளிநாட்டில் வாழும் இஸ்லாமியர்கள் சந்திக்கும் மிகபெரிய, ஆபத்தான இழப்பு, இதுவாகும். ஈமானிய உரைகள், உறவுகள் இல்லையானால் ஷைத்தான் எங்களை சிறைப்பிடித்து விடுவான். எம் ஓய்வு நேரங்களை உருக்குகுலைத்து விடுவான்.

இதை உணர்ந்து குத்பா தமிழ் மொழிபெயர்ப்பு ஏற்பாடு ஒன்றை SLDC – QATAR செய்துள்ளது:

அனைத்து சகோதரர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இத்தகவலை நண்பர்கள் / தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்துகொள்வோம். நன்மைகள் பெற்றிடுவோம்.





No comments

Powered by Blogger.