முஸ்லிம் காங்கிரஸினர் தேசிய காங்கிரஸில் இணைந்து செயற்பட தயார் - இது உதுமாலெப்பையின் நம்பிக்கை
(எம்.எம்.ஏ. ஸமட்)
மறைந்த தலைவர் அஷ்ரப் நமது மக்கள் தொடர்பாக என்ன கனவுகளைக் கண்டாரோ அக்கனவுகளை நிறைவேற்றும் பயணம் தேசிய காங்கிரஸினால் முன்னெடுக்கப்படுகிறது.
இவ்வாறு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார். தேசிய காங்கிரஸின் 10 வது தேசிய மகாநாட்டின் பின்னர் கிழக்கு மகாணத்தில் ஏற்பட்டுள்ள தேசிய காங்கிரஸின் எழுச்சி தொடர்பாகக் கேட்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது
தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டு ஒரு தசாப்பதம் நிறைவடைந்துள்ளது. தேசிய காங்கிரஸ் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கங்களை கடந்த 10 வருடங்களில் முடிந்தளவில் நிறைவு செய்துள்ளது,
10வது மகாநாடு மக்கள் மத்தியிலும் கட்சியின் பேராளர்கள் மற்றும் போராளிகள் மத்தியிலும் எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கட்சியின் ஸ்தாபகத் தலைவரும் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லா கட்சியைக் கட்டுக்கோப்புடன் வழிநடத்திச் செல்வதன் வெற்றியின் பயணாகவே இத்தகைய எழுச்சி ஏற்பட்டுள்ளது. தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர் அமைச்சர் அதாஉல்லா அரசியலுக்காக நமது மக்களை ஒரு போதும் ஏமாற்றவில்லை. மாறாக மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபுடன் இணைந்து பல போராட்டங்களுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவர்.
வடகிழக்கு மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமென மறைந்த தலைவர் அஷ்ரப் கனவு கண்டார். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். அந்த முயற்சிகள் கைகூடும் தருவாயிலேயே அவர் உயிர் துறந்தார்
தலைவர் அஷ்ரப்பின் மறைவுக்குப் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையின் தடம்புரண்ட நடவடிக்கைகளால் நமது மக்களுக்கு நிம்மதியினை பெற்றுக் கொடுக்க முடியாதென உணர்ந்து அமைச்சர் அதாஉல்லா தேசிய காங்கிரஸ் எனும் புதிய கட்சியை உருவாக்கி வடகிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசம் என்றும், அரசாங்க கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்றும் நிருவாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கிழக்கு மாகாணம் தனியாக பிரிக்கப்பட வேண்டும், கிழக்கு மாகாணத்தில் வாழும் மூவின மக்களும் வரலாற்று இன ஐக்கியத்துடன் வாழும் நிலைமையை உருவாக்கப்பட வேண்டும் என குரல் கொடுத்தார்.
கிழக்கு மாகாணம் தனியாக பிரிந்தது, கிழக்கில் இன உறவு கட்டியெழுப்பப்பட்டு கிழக்கு மாகாண சபை நிதியைக் கொண்டு எல்லா இன மக்களுக்கும் கடந்த 5 வருட காலமாக வரலாற்று அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை கிழக்கு மாகாண சபையினூடுhக அவரது வழிகாட்டலின்பால் எனது அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர் அமைச்சர் அதாஉல்லா தூர நோக்கான சிந்தனையால் அம்பாறை மாவட்டத்தில் அரசியல் அதிகாரம் இல்லாமல் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்த சகோதர கிரமாங்களுக்கும் அரசியல் அதிகாரங்களை வழங்கி நமது அரசியல் தலைவர்களுக்கெல்லாம் முன்மாதிரியாக திகழ்கின்றார். அதுமாத்திரமின்றி, தேசிய தலைவர்; அமைச்சர் அதாஉல்லா தேசிய காங்கிரஸ் ஊடாக பல முக்கியஸ்தர்களை உருவாக்கி நமது மக்களையும், நாட்டையும் நேசித்து எல்லா இன மக்களோடும் நிரந்தரமான இன உறவுடன் செயற்படுபவர்களை உருவாக்கியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் எமக்கு வாக்களித்த மக்கள், வாக்களிக்காத பிரதேசங்கள், அரசியல் அதிகாரமற்ற பிரதேசங்களை அடையாளம் கண்டு அபிவிருத்திப் பணிகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறான நடவடிக்கைகள் நமது மக்களின் மத்தியில் குறிப்பிhக தேசிய காங்கிரஸின் போராளிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் பல முக்கியஸ்தர்கள் தேசிய காங்கிரஸில் இணைந்து செயற்படுவதற்கு தயாராகவுள்ளனர். இன்றும் முன்னால் கல்முனை மேயர் தேசிய காங்கிரஸில் இணைந்துகொண்டுள்ளார். காலம் கணியும்போது பலர் எங்களுடன் இணைந்துகொள்ளவர். தேசிய காங்கிரஸின் தலைமைத்தில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையும் அத்தலைமையின் தூரநோக்கான தலைமைத்துவ வழிகாட்டலும் கட்சி தொடர்பான நம்பிக்கையைக் கட்டியெழுப்பி வருகிறது. அந்த நம்பிக்கையே தேசிய காங்கிரஸின் 10வது தேசிய மாநாட்டின் பின்னரான கட்சி தொடர்பான எழுச்சிக்குக் காரணமென அவர் மேலும் குறிப்பிட்டார்
மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் கனவுகளை இவர்கள் நிறைவேற்றப்போகிறார்களா....?? அப்படியானால் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் உடைக்கப்படும்போதும் மூடப்படும்போதும் வாய்மூடி மெனமாக இருப்பதாக தலைவர் அஸ்ரப் கனவு கன்டாரா...?
ReplyDelete'ஹலால்' பிரச்சினை ஒன்று வரும் அப்போது ACJU வுடன் சேர்ந்து கைகோர்த்து அதை இனவாதிகளுக்கு....... 'ஹலால்' தேவையில்லை.... !!! விட்டுக்கொடுப்போம்......!! என்று தலைவர் அஸ்ரப் கனவு கண்டாரா...??
முஸ்லீம் பெண்கள் 'ஹிஜாப்' என்ற இஸ்லாமிய வழிமுறையை பின்பற்றும்போது அதை 'நாட்டுக்கும் இலங்கை மக்களின் கலாச்சாரத்துக்கும் கேடு' என்று BBS எதிர்க்கும்போது மௌனமாக இருந்து அதற்கு ஆதரவளிப்பதாக தலைவர் அஸ்ரப் கனவு கன்டாரா.....??
முஸ்லீம்கள் வெளிநாடுகளின் உதவியுடன் இலங்கையில் பயங்கரவாதத்தை உருவெடுக்கிறார்கள் என்று இனவாதிகள் சொல்லும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் 'நீங்கள் சொல்வது சரிதான்' என்பதுபோல் மௌனமாக இருப்பதாக கனவு கன்டாரா....?