Header Ads



அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கவனத்திற்கு..!


அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பராமரிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வந்த கோணாவத்தை பொதுக்  குடிநீர்க் கிணறு கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து எவ்வித பராமரிப்பும் இன்றி தற்போது சேதமடைந்தும் பாழடைந்தும் காட்சியளிக்கின்றது. அட்டாளைச்சேனைப் பிரதேச பின்தங்கிய கிராம மக்களின் குடிநீருக்காக கடந்த காலங்களில் உபயோகிக்கப்பட்டு வந்த இந்தக் கிணறு தற்போது அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் பராமரிக்கப்படாமல் உள்ளதாக இப்பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பொதுக் கிணற்றினுள் அதிகமான கழிவுப்பொருட்கள் கொட்டப்படுவதும், கிணற்றினைச் சுற்றி இரண்டு அடிக்கு மேல் புற்கள் வளர்ந்திருப்பதும், நுழைவாயில் மூடப்படாமல் சேதமடைந்திருப்பதும், இதற்கு அருகாமையில் உள்ள வடிகாண்கள் அசுத்தமாகவும் காணப்படுவதாலும் சுற்றாடல் மாசுபட்டு  நுளம்புகள் பெருகி டெங்கு நோய் பரவக்கூடிய அபாயமும் உருவாகலாம்.

அபிவிருத்தியில் பாரபட்சம் காட்டப்டும் இப்பிரதேசத்தில் இதனையாவது அட்டாளைச்சேனை பிரதேச சபை கவனிக்குமா? என்று மக்கள் ஆவேசத்துடன் கேட்கின்றனர்.

இப்பிரதேச மக்களின் வாக்குகள் மூலம் பிரதிநிதிகளான அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதிநிகளே கொஞ்சம் இதனைப் பாருங்கப்பா..

No comments

Powered by Blogger.