Header Ads



'பள்ளிவாசல்களுக்கிடையே உள்ள பிரிவுகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வருதல் வேண்டும்' றவுப் ஹக்கீம்

(அஸ்ரப் ஏ. சமத்)
பேராசிரியர் அல்லாமா உவைஸ் அவர்களின் புதல்வர் அஹ்மாம் உவைஸ் தற்பொழுது வக்பு சபையின் தலைவராக நியமனம் பெற்றுள்ளார். அவருக்கு தணது தந்தை முன்னெடுத்த  பாரிய பொறுப்புக்கள் உள்ளன.  அறபு தமிழ் பற்றிய ஆய்வுகள்களை மேற்கொண்டு அதனை தற்கால சமுகத்திற்கு வெளிக்கொணர வேண்டும். அத்துடன் பள்ளிவாசல்களுக்கிடையே பல்வேறு பிரிவுகள் உள்ளன. அவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து ஒரு குடையின் கீழ் கொண்டு வருதல் வேண்டும். என அமைச்சர் றவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

பேராசிரியர் அல்லாம உவைஸ் அவர்களின் நினைவு தின பேச்சும். காத்தாண்குடி பௌஸ் மெலவி எழுதிய 5 நூல்களும் வெளியீட்டு வைக்கப்பட்டன. அதில் உவைஸ் பற்றிய நூல் ஒன்று வெளியீட்டு வைக்கப்பட்டது. இந் நிகழ்வுக்கு மர்ஹும் எம்.எச்.எம் அஸ்ரபின் மைத்துணரும்  மேல் நீதிமன்ற நீதிபதி எ.டப்ளியு சலாம் தலைமை வகித்தார். பேராசிரியர் தில்லைநாதன், ஏ.ஆர்.எம். ஜிப்ரி, ஆகியோரும் உரைநிகழ்த்தினார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் கலந்து சிறப்பித்தார். உவைசின் குடும்பத்தாரும் கலந்து கொண்டனர்.

இங்கு  பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போது  மேற்கண்டவாறு அமைச்சர் றவுப் ஹக்கீம் தெரிவித்தார். நாம் அறபு தமிழை பாதுகாக்க வேண்டும். பேரசிரியர் உவைஸ் அவர்கள் தமிழ்நாட்டில் காமராஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பதவி வகித்து உமர்ப்புலவர் தொட்டு 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய இலக்கியங்களை ஆய்வு செய்திருந்தார் 72 க்கும்மேற்பட்ட நூல்களை வெளியீட்டு இருந்தார்.  தமிழ் நாட்டில்  கல்வியமைச்சர் அவர்கள் ;இஸ்லாமி தமிழ் கற்கை நெறிக்கு பேராசிரயராக உவைசை நியமணம் செய்திருந்தார். விபுலானந்த அடிகள் அந்த பல்கலைக்கழத்தில் பேராசிரியராக இருந்து போது அல்லாம உவைசிடம் உமக்கு இஸ்லாமிய இலக்கியம் தெரியுமா ? உமர்ப்புலவரின் சிறாப்புறானம் தெரியுமா எனக் கேட்டதற்கு இது எதுவுமே தெரியாது என உவைஸ் சொல்லியிருந்தாh. அதன் பின்னர் 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய இலக்கியங்களை ஆராய்ந்து அவர் அத்துறையில் பேராசிரியராக விளங்கினார்.  மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்களின் வேண்டுகோழுக்கினங்க உவைசின் குடும்பத்தினர் உவைசின் சகல நூல்களையும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அன்பளிப்புச் செய்தனர்.  எனவும் அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.




1 comment:

  1. Dear Mr. Justice Minister:
    How can you solve the differences between the mosques while you have difference within your party? By the way, what is Arabic Tamil? Is it really something important??The real important issues such Halaal, Fardah, Refugees' settlement are still on the air!. Why do you need to input Ashraf's name all the time? Is it really a politics? Please encourage people perform five time prayers ontime; Refrain from Haraam income; Ask Thua. Allah will show a way to solve SL Muslims' problems.
    Muslims.

    ReplyDelete

Powered by Blogger.