நாட்டில் முஸ்லிம் தீவிரவாதம் களையப்பட வேண்டும் - ஓமல்பே சோபித தேரர்
நாட்டில் தீவிரவாதத்திற்கும் அதனை ஊக்குவிக்கும் முயற்சிகளும் இடமில்லை. அப்படியான முயற்சிகள் முறியடிக்கப்படும் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
ஒரு சிறிய குழுவினர் நாட்டில் தீவிரவாதத்தை ஊக்குவிக்க முயற்சித்து வருகின்றனர். யார் தீவிரவாதிகள் யார் உண்மையானவர்கள் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
எந்த அடிப்படைவாத தீவிரவாதிகளாக இருந்தாலும் அவர்கள் நாட்டின் தேசிய நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல். ஒரு குழு சத்தமிட்டு முடித்த பின்னர், மற்றொரு குழு மறுமுனையில் சத்தமிடுகிறது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அதேவேளை நாட்டில் முஸ்லிம் தீவிரவாதம் களையப்பட வேண்டும் எனவும் இதனடிப்படையிலேயே அரசாங்கத்தை ஏமாற்றி வில்பத்து தேசிய வனத்தின் நிலத்தை முயற்சிக்கப்படுவதாகவும் ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
அமைச்சர் றிசாத் பதியூதீனின் ஆதரவுடன் சில முஸ்லிம் குடும்பங்கள் வில்பத்து வனத்தில் நிலத்தை சட்டவிரோதமாக கைப்பற்றியுள்ளதாக அந்த கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் கூறியிருந்தார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ரம்புக்வெல,
ஆளும் அரசாங்கத்தின் கூட்டணி கட்சி என்ற வகையில் ஜாதிக ஹெல உறுமயவின் நோக்கத்தை மதிப்பதாகவும் நாட்டின் நலன் கருதி அந்த கட்சி செயற்படும் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.
அடிப்படைவாத தீவிரவாத குழுக்கள் நாட்டில் தீயை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றன. அவ்வாறான நிலைமை ஏற்பட இடமளிக்க முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் அல்லது பௌத்த மதங்களை சேர்ந்த சாதாரண மக்களில் அடிப்படைவாத தீவிரவாதிகளை காணவில்லை.
நாங்கள் உண்மையான தீவிரவாதிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
Muzalil onda mayirai kalainduwittu wa.
ReplyDeleteஇது உண்மையில் “ ஓமல் பேய்தான்”
ReplyDelete