முஸ்லிம் பாடசாலைகள், விடுமுறை நிறைவடைந்து திறக்கப்பட்டன..!
(எம்.எம்.ஏ.ஸமட்)
முதலாம் தவணை விடுமுறை நிறைவடைந்து இரண்டாம் தவணை பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளுக்காக சகல அரச முஸ்லிம் பாடசாலைகளும் இன்று (16) புதன்கிழமை திறக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய இன்று புதன்கிழமை இரண்டாம் தவணை பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளுக்காகத் திறக்கப்படும் நாடு பூராகவுமுள்ள 853 முஸ்லிம் பாடசாலைகளும் இரண்டாம் தவணை விடுமுறைக்காக ஜுன் மாதம் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்வி நடவடிக்கைகளுடன் மூடம்படும்.
இதேவேளை, முதலாம் தவணை விடுமுறைக்காக கடந்த 8ஆம் திகதி மூடப்பட்ட சகல சிங்கள மற்றும் தமிழ் அரச பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திங்கள் கிழமை இரண்டாம் தவணை பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளுக்காகத் திறக்கப்படுமென அமைச்சு குறிப்பிடுகிறது.
இவ்வாறு திறக்கப்படும் சிங்கள் மற்றும் தமிழ் பாடசாலைகள் யாவும் இரண்டாம் தவணை விடுமுறைக்காக ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி மூடப்படவுள்ளன.
நாடு பூராகவும் 6,368 சிங்கள பாடசாலைகளும் 2101 தமிழ் பாடசாலைகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment