Header Ads



சமூகமா..? நாற்காளியா..??

(நாகூர் ழரீஃப்)

இலங்கை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மாதகாலம் பாராளுமன்றப் பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதாக ஒரு ஆச்சரியமான செய்தி சமூக மட்டத்தில் பேசப்படுகின்றது. இச்செய்தியின் நம்பகத் தன்மைகள் பற்றி எமக்குத் தெரியாதிருந்தாலும், இது பற்றிப் எமது தலைகள்? ஓன்றிணைந்து ஆராய்வதற்கான காரணங்கள் என்ன?

நாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மதவெறியர்களின் ஈனச் செயற்பாடுகள் தலைக்கு மேல் வெள்ளம் என்ற போது ஏன் இப்படியான ஒரு விடயம் பற்றிப் பேசுகின்றனர்? அதிலும் ஏதாவது சுயநலம் மறைந்திருக்கின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

கட்சி வெறியோடு தடம் பதித்துள்ள எமது அரசியல் தலைவர்கள்? எனப்படுவோர் எப்படி எமது சமூக நலனில் அக்கறை கொண்டார்கள்? தமது தலைமைத்துவத்தைக் கூட மதிக்காது நாற்காளியைப் பெற்றுக்கொண்ட இவர்களா ஒன்னிணையப் போகிறார்கள்?

ஒரு கட்சிக்காரார் ஏதாவது பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுமு; போது, அது பற்றிய பெய்யான தகவல்களை உயர் மட்டத்தினருக்கு வழங்கி, நாற்காளிக்காய் அலைபவர்களா ஒன்றிணையப் போகிறார்கள்?

இப்பகிஷ்கரிப்பை முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளரின் கூற்றானது கேலிக்கூத்தாகும். இவர்களால் ஒன்றுபட முடியாது என்பதையே இக்கூற்று உறுதிப்படுத்துகின்றது.

அதாவது நாங்கள் ஒன்றுபட்டு ஒரு தீர்மானத்தை அமுல்படுத்தும் திராணியற்றவர்கள் உங்களால் முடியுமாயின் செய்து பாருங்கள் என்பதுதான் இதன் கருத்து. எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு சமூக விடயத்தில் ஒன்றுபட மாட்டோம் என்பதில் ஒன்றுபட்டவர்கள்.

எந்த ஒரு பள்ளிவாசலும் தாக்கப்படவில்லை என்று சர்வதேசத்துக்குச் சொல்லும் தைரியசாலிகளான இவர்களா ஒன்றுபடப் போகின்றார்கள்?

அல்லாஹ்வின் மாளிகையினுள் பன்றித் தலையை எறிந்து, கேவலப்படுத்தியதை விடவும், அல்லாஹ்விற்கே கொடும்பாவி எரித்ததைவிடவும் பெரிய விஷயமா இப்பொழுது நடைபெறகின்றது? அப்பொழுதெல்லாம் ஊமைகளாகவும் செவிடுகளாகவும் குருடுகளாகவும் இருந்த இவர்களுக்கு இப்பொழுது ஏன் இப்படியான ஒரு ஆச்சரியமான, என்றும் அசாத்தியமான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்கள? இதில் ஏதோ ஒரு சுயநலம் இருப்பதாகவே பலரும் பேசிக் கொள்கின்றனர்.

ஆடு நலைவதைக் கண்டு ஓநாய் அழுத கதைதான் இது, இவர்கள் தமது பிரதேசத்தில் தமது வாக்குப் பிச்சைகளை வளப்படுத்திக் கொள்ள மேற்கொள்ளும் ஒரு தந்திரமோ அல்லது தம்மீது நம்பிக்கை இழந்து, விரக்தியடைந்துள்ள சமூகத்தை மீண்டும் ஒரு முறை ஏமாற்ற எடுத்துள்ள நாடகப் பாத்திரமோ அன்றி வேறில்லை.

இத்துனை துரோகச் செற்பாடுகள் நடந்தேறிய போதும், அரசுக்கு வால்பிடிக்கும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு ஒரு வாரகாலத்துக்குள் இப்படியான ஒரு தீர்மாணமா? இத்தீர்மாணமெடுக்கும் கூட்டத்தை கூட்டியது யார்? துலைமை வகித்தவர் யார்? முடிவெடுத்தவர் யார்? எல்லோருமே தலைவர்கள், அதிகாரம் வேண்டி நிற்பவர்கள் இவர்களால் எப்படி ஒரு கட்டுக் கோப்பிற்குள் வரமுடிந்தது?

இது சமூகப்பற்றுள்ள தலைவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் சாத்தியமாகலாம். அதிகாரமும் நாற்காளியும் ஜனாதிபதியின் விருப்பும் மாத்திரம் குறியாகக் கொண்ட இவர்கால் எப்படி முடியும்? பொது பல சேனாவின் கூட்டத்தில் குத்துவிளக்கேற்றும் இவர்கள் எமது சமூகத்துக்கு சாவு மணி அடிப்பவர்கள் என்பதை சமூகம் இன்னும் மறக்கவில்லை.
ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்து, மாட்டிக் கொடுத்து சேவை மனப்பான்மையுடன் செயலாற்றும் இவர்கள் இப்படியான சமூகத் துரோகச் செயற்பாடுகளில் ஒரு போதும் ஈடுபட மாட்டார்கள். அவர்களது குறிக்கோள் நாற்காளிகளாக இருக்கும் வரை. இதுவே சத்தியம் சமூகமே பொறுத்திருந்து பார் இதன் யதார்த்தத்தை.

அல்லாஹ்வே எமக்குப் போதுமானவன்.

1 comment:

  1. In the past we recited Kunooth as a kind of dua. Why can't start again because our sole protecter is Allaah only. Those who are concern for ummah please recite following on daily basis at least 33 times or more as a zikr.
    Allaahumma killa adathal kafiroon, Allaahumma killa adathal mushrikoon, Allaahumma killa adathal munafiqoon.

    ReplyDelete

Powered by Blogger.