Header Ads



கிராமிய மக்கள் ஒன்று கூடலும், நடமாடும் சேவையும்..!

(ஏ.எல்.ஜனூவர்)

மஹிந்த சிந்தனையின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வழி நடாத்தப்படும் 'நிறைவான இல்லம் வளமான தாயகம்' எனும் தொனிப் பொருளில் நாடு பூராகவும் நடாத்தப்பட்டு வரும் கிராமிய மக்கள் ஒன்று கூடலும், நடமாடும் சேவையும் 21.04.2017 (இன்று) பொத்துவில் அல்-கலாம் பாடசாலையில் பிரதேச செயலாளர் எம்.எம்.முசர்ரத் தலைமையில் இடம்பெற்றது.

பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை கலந்து கொண்டு நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்தார்.

இவ் நடமாடும் சேவை பொத்துவில் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொத்துவில் 13,14,16,17 ஆம் கிராம சேவகர் பிரிவுகளுக்கு நடாத்தப்பட்டது. இப்பிரதேச மக்களினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு துரைசார்ந்த அதிகாரிகளினால் குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கான குறைபாடுகளை தீர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

No comments

Powered by Blogger.