மாகாண சபைத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது - சீலரத்ன தேரர்
மாகாண சபைத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாதென ஜனசெத பெரமுணவின தலைவர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் குறிப்பிடுகின்றார்.
ஜனசெத முன்னணி நேற்று மாலை ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீலரத்ன தேரர் தெரிவித்த கருத்து,
“ஜனசெத்த முன்னணிக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். எமக்கு ஒரு ஆசனமேனும் கிடைத்திருக்கும் பட்சத்தில், எங்களினால் ஆற்றப்படுகின்ற சேவையோ ஏறாலம்… நீங்கள் இன்று சில கட்சிகளுக்கு வாக்களித்து சிலரை தெரிவு செய்துள்ளீர்கள். சிறு கட்சிகளை தெரிவு செய்துள்ளீர்கள். அவர்களினால், வேலை வாய்ப்புக்களோ அல்லது பிரதேசத்தில் ஏதேனும் வேலைகளை செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகின்றது. இந்த தேர்தல் பெறுபேறுகளை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த தேர்தல் பெறுபேறுகளை ஏற்றுக் கொள்ள முடியாதவாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனை நாங்கள் கூறிக் கொள்ள விரும்புகின்றோம். அதேபோன்று, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றுக்கான வாக்கு வங்கிகளும் தற்போது வீழ்ச்சி கண்டு வருகின்றன.”
Post a Comment