யாழ்ப்பாண முஸ்லிம் இரும்பு தொழிலாளிகளுக்கு பாதிப்பு
(பா.சிகான்)
யாழ் மாவட்டத்தில் இரும்புத்தொழிலில் ஈடுபடும் மக்கள் திடிரென ஏற்பட்ட விலைவீழ்ச்சியினால் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மூன்று தினங்களாக இவ்வாறான நிலைமை தொடர்வதாகவும் இதனால் பெரும் நஷ்டங்களை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தவிர யாழ் முஸ்லீம்களின் பிரதான தொழிலாக தற்போது இரும்புத்தொழிலையே மேற்கொண்டு வருகின்றனர்.இவ்வாறான திடிர் விலைகுறைப்பு அவர்களின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இரும்பு சேகரிக்க நாட்டுக்கு செல்லும் இரும்புத்தொழிலாளர் கடந்த காலத்தில் 40 முதல் 42 ரூபாவிற்கு இரும்பு வியாபாரிகளுக்கு இரும்புகளை வழங்கிவந்தனர்.
ஆனால் இன்று சடுதியாக ஏற்பட்ட மாற்றத்தினால் 30 ரூபா விற்கு இரும்பினை இரும்பு வியாபாரிகளுக்கு வழங்குகின்றனர்.
கடந்த காலத்தில் இரும்பின் விலை இம்மாவட்டத்தில் 49 முதல் 51 ரூபாய் வரை ஏற்றம் கண்டிருந்தது.
இன்று இவ்வாறு விலைதளம்பலினால் இந்நிலை ஏற்பட்டு;ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் இரும்புத்தொழிலை அதிகமானோர் மேற்கொண்ட நிலையில் இவ்வாறான திடிர் விலை குறைப்பினால் தொழிலினை அநேகர் கைவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment