Header Ads



சுவிஸ்சர்லாந்தில் இஸ்லாமிய அறிஞர்களின் வருகை..!


சுவிற்சர்லாந்தில் எதிர்வரும் 19, 20 ஆம் திகதிகளில் உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களின் சிறப்பு பயான் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

குறித்த திகதிகளில் பிற்பகல் 2.30 மணி தொடக்கம், மாலை 9 மணிவரை இந்த நிகழ்வுகள் FRIEDENSZENTRUM, BERNERSTRASSE NORD 208, 8064 Zurich என்ற முகவரியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ற விலாசத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில்  சேஹ் சொஹைர் ஜென்டுபி, டாக்டர் ஒமர் அப்துல்கபி, டாக்டர் பாதர் அல்கஜ்ரப், டாக்டர் அஹ்மட் அல்கலீபா, டாக்டர் முத்லக் அல்கரவி உள்ளிட்டவர்களின் பயான்  நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

நிகழ்வுகள் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படவுள்ளதுடன், பார்வையாளர்கள் கேள்விகளை தொடுக்கவும் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிறுவர்கள் நிகழ்வில் பங்கேற்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த மேலதிக தகவல்களை 0763243052, 0797995684, 0763480832, (0765252855 தமிழ் மொழி) என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும்..!



No comments

Powered by Blogger.