Header Ads



பொதுபல சேனாவின் உச்சக்கட்டம்..!

(ஜே.எம்.எச்.)

கடந்த மூன்று வருடங்களாக ஏப்ரல் மாதம் ஆரம்பமாகும் போதே முஸ்லிம்கள் அச்சத்துடனும் சந்தேகப் பார்வையுடனும் வாழும் நிலையை காணமுடிந்தது.

அதே நேரம் 2012 முதல் பொது பலசேனா போன்ற பல்வேறு சேனாக்கள் உருவெடுத்த காலமும் இதுதான். அந்த அடிப்படையில் ஒவ்வொறு ஏப்ரலையும் அல்லது சித்திரைப் புத்தாண்டையும் இனவாதம் வரவேற்பதைக் காண்கிறோம்.

பெசன்பக் தாக்கப்பட்ட காலமாக இருக்கலாம். ஹிஜாப் இற்கு எதிராகப் போர்கொடி தூக்கிய காலமாக இருக்கலாம். அல்லது ஹலால் எதிர்ப்புப் பிரகடணக் காலமாக இருக்கலாம் அது இலங்கைக்கு வசந்தகாமாக இருந்தாலும் இலங்கை வாழ் முஸ்லீம்களுக்கு முசீபத்துக் காலமாக உள்ளது.
நிபோன் ஹோட்டல் விவகாரம், அதற்கு முந்திய தினம் நடந்த தொலைக் காட்சி விவாதம் வில்பத்து சுற்றுலா இவை அனைத்தும் புத்தாண்டை மையமாக வைத்தே திட்டமிடப்பட்டள்ளது. அதில் நிப்போன் ஹோட்டல் சம்பவத்தை சிலர் நுனிப்புல் மேய்ந்த மாதரி நோக்க முடியும். ஆனால் இச்சம்பவம் சொல்லும் செய்தியோ மிகப் பாரதூரமானது. ஒரு ஹோட்டலில் ஒரு அமைப்பு நான்கு பத்திரிகையாளனை வரச் சொல்லி மகா நாடு நடத்துவது சர்வசாதாரண விடயம். நுடத்துபவன் ஏதோ சொல்லிவிட்டுப் போவான். அவரவர் கோணத்தில் எழுதுவர். நாமும் பத்திரிகையாளர்கள் என்ற வகையில் எமக்கும் வாரம் தவறாது ஊடக சந்திப்புக்கள் இடம் பெறுகின்றன. ஒருநாளைக்கு இரண்டு மூன்று கூட நடக்கின்றன. தலை நகரில் மட்டு மல்ல கண்டியில் கூட ஒவ்வொறு நாளும் யாராவது ஒருவர் ஒரு ஹோட்டலுக்கு அழைத்து மகா நாடு நடத்துவார். பத்திரிகையாளர்களான எமக்கே சிலவேளை அது பற்றி கேள்விப் படுவதில்லை. பத்திரிகை  உலகில் இது ஒரு சாதாரண நிகழ்வு. இது இப்படி இருக்க அதைக் கூட நடத்தும் உரிமை அந்த Nதுசிய சேனாவுக்கு இல்லை என்றால் நாட்டின் சுதந்திரம் பற்றி என்ன கூறலாம். பத்திரிகை நிறுவனத்துக்கு முந்திய தினம் அனுப்பிய பெக்ஸ் செய்தியை வெளியே கசிய விட்டவர்கள் யார்?

சரி அதனை தடுக்க வேண்டுமானால் நாட்டில் வறையறை செய்யப்பட்ட நிறுவனங்கள் உண்டு. அவை ஏன் கைகட்டிப் பாhத்துக் கொண்டிருந்தன. அல்லது உள்ளே நடப்பது நடக்கட்டும் வெளியார் போக வேண்டாம் என்று அத்து மீறிய கும்பலுக்கு பொலீஸார் பாது காப்பு அளித்தார்களா? 

அவ்வாறு அத்து மீறவேண்டிய தேவைதான் என்ன? சரி அதனை தடுக்க குறிப்பிட்டகாவிக்கு உள்ள அதிகாரம் என்ன? அதனை யார் வழங்கியது? இப்படியான வினாக்களை நீங்களே கேட்டுக் கொண்டால் போகிற போக்கில் என்ன நடக்கப் போகிறது என்பது புலனாகும். 

இவற்றை சற்று சிந்தித்தால் வியாபாரத்தை மையமாக வைத்து திட்டமிடப் படும் ஒரு செயற்பாடகவும் சிலர் இதனை விமர்சிக்கின்றனர். சாயம் வெலுத்துள்ள பல சேனாவுக்கு சாயம் பூசும் பேரின வியாபாரிகளின் பண உதவிதான் இதனை வழி நடத்துகிறதா அல்லது வழமையாக நாம் சிந்திக்கும் யகூதிகளின் திட்டங்களா என்பது வெளிவரக் காலம் எடுக்கலாம்.

அகழி யுத்த ஆரம்பத்தில் எதிரிகள் தாக்க வருவதை அறிந்த நபி (ஸல்) அவர்கள் தோழர்களுடன் நடத்திய ஆலேசனைப் பிரகாரம் அகழி வெட்டினார்கள். வரவுள்ள ஆபாத்திலிருந்து சமூகத்தைப் பாதுகாகக் மேற்கொண்ட முன் ஆயத்தம் என்று கூடக் கூறலாம். நடப்பது நடக்கட்டும் அல்லாஹ் பாhத்துக் கொள்வான் என்று இருக்கவில்லை. அதுபோல் எமக்கும் ஏதோ நடக்கப் போகிறது என்பதை யூகிக்க முடியும். அதற்கு நாம் போராட தேவையில்லை. ஆனால் சாத்வீக ரீதியில் செயற்பாடுகள் இல்லாமல் இல்லை.

சூழ்ச்சிக்காரர்களுக் கெல்லாம் பெரிய சுழ்ச்சிகாரன் அல்லாஹ். ஆனால் இஸ்லாமிய நெறிமுறைகளைப் பேணி ஹராம்,ஹலால் இவற்றைப் பேணி நடப்பதனாலும் அல்லாவின் உதவியை எதிர்;பார்க்கலாம். அல்லது உதவி வரும் போது வரட்டும். அதுவரை சாத்வீக ரீதியில் நாம் செய்யக் கூடிய எத்தனையோ பணிகள் உண்டு. அவற்றின் மூலம் காபிர்களது உள்ளத்தையாவது நாம் கவர்ந்து வைத்திருந்தால் ஆபத்தில் உதவா விட்டாலும் அநியாயம் செய்வதில் இருந்து தவிர்ந்து கொள்வார்கள் தானே?

தற்போது வியாhரம் கலை கட்டும் நேரம். அவர்களது உள்ளத்தை வெல்ல நிறைய சந்தர்ப்பம் உண்டு. அரசுக்கு ஏசி ஏசி பொருற்களைப் பதுக்கிவைத்துக் கொண்டு கொள்ளை இலாபம் அடித்தால், வியாபாரம் கலை கட்டும் போதெல்லாம் நாம் அறியாமலே சேனாக்களை அனுப்பி அல்லாஹ் எம்மை சோதிக்கலாம். அல்லது எமது வியாபாரங்களை முடக்கலாம். எமது நடத்தையே அதனைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கலாம்.

ஆனால் ஒரு உண்மை மட்டும் வெளிச்சம். மேற்படி சேனாக்களின் தொழிற்பாடு உச்சக் கட்ட்டத்திற்கு வருவது மார்ச் மற்றும் ஏப்ரல் மாத காலப் பகுதியாகும். இது ஏன்?

1 comment:

  1. Better to ask from defence secretary he knows very well

    ReplyDelete

Powered by Blogger.