இலங்கையில் பெண் அரசியல்வாதிகள் குறித்து விமர்சனம்..!
இலங்கையில் பெண் அரசியல்வாதிகள் காத்திரமான முறையில் பங்களிப்பினை வழங்குவதில்லை என ஆய்வு ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தென் ஆசியாவில் இலங்கையில் பெண்கள் முக்கியமான பதவிகளை வகித்துள்ளனர்.
உலகின் முதல் பெண் பிரதமர், பெண் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி, பெண் சட்ட மா அதிபர், பெண் பிரதம நீதியரசர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், பாராளுமன்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் பங்களிப்பும் மிகவும் சொற்பளவில் காணப்படுகின்றது.
225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை பாராளுமன்றில் அதில், 13 பேரே பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 5.8 வீதமான பெண்களே பாராளுமன்றில் அங்கம் வகிக்கின்றனர்.
பாகிஸ்தான், இந்தியா, பூட்டான், பங்காளதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளை விடவும் இலங்கையில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் விகிதாசாரம் குறைவானது என தெரிவிக்கப்பட்டுள்ளது,
பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் காத்திரமான பங்களிப்பு கேள்விக்குரியாகவே தொடர்ந்தும் காணப்படுகின்றத என குறிப்பிடப்பட்டுள்ளது. சில அமைச்சுப் பதவிகளை பெண்கள் வகித்த போதிலும், காத்திரமான முறையில் அவர்களது பங்களிப்பு கிடையாது என ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post a Comment