Header Ads



அல்குர்ஆனை அவமதித்தமை தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிரான சிஐடி விசாரணை


பொதுபல சேனா அமைப்பு எதிரான விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

கொழும்பில் நடைபெற்ற ஜாதிக பலசேனா அமைப்பின் ஊடக சந்திப்பிற்கு இடையூறு விளைவித்து, வட்டரெக்க விஜித தேரருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் புனித குர் ஆனை அவமதித்தமை ஆகியன தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் கொம்பனித் தெரு பொலிஸார் விசாரணைகளை நடத்தினர்.

இந்த நிலையில், பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.


3 comments:

  1. நடக்கப் போறது ஒன்றும் இல்லை
    நாலு நாள் போக முதல் நம் சமூகத்துக்கு எல்லாம் மறந்து போய்விடும்
    வழக்கு தொடர்ந்தவரும் களைத்து விடுவார்
    இதனை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  2. why? this is another cheating show to international see the result is what ? wait n see he is a innocence monk he newer ever insult others he is following buddas way only

    ReplyDelete
  3. I pray our Almighty forgive the reverent's sins & provide him the Enlightenment of his guidance ASAP. Ameen.

    ReplyDelete

Powered by Blogger.