Header Ads



முஸ்லிம்கள் இந்த நாட்டின் பிரஜைகள் இல்லையா..?

நாட்டின் சட்டம், ஒழுங்கு என்;பவற்றை பொதுபல சேனா அமைப்பினர் கேள்விக் குறியாக்கியுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் எம்.பி.

(றிப்கான் கே. சமான்)

    அன்மைக் காலமாக முஸ்லிம் மதஸ்தாபனங்களுக்கு விடப்படும் அச்சுறுத்தல்கள், இஸ்லாமிய ஷரிஆ, இஸ்லாமிய கலாச்சாரம் என்பவற்றைச் சுதந்திரமாக பின்பற்றுவதில் முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் அச்ச நிலை என்பவற்றை நோக்கும் போது முஸ்லிம்கள் இந்த நாட்டின் பிரஜைகள் இல்லையா? என்பதை என்னத் தொன்றுகின்றது.

மேலும் அண்மையில் மன்னார் மாவட்டம், முசலிப் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட பொது பல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர்  உட்பட ஏனையவர்கள் 30வருட யுத்தத்தில் அகதி முகாமில் சொல்லணாத் துன்பத்தை அனுபவித்து விட்டு, எதையெல்லாம் ஒரு மனிதன் இழக்கக் கூடாதோ, அத்தனையும் இழந்து இந்த சமாதானச் சூழலில் சொந்த மண்ணில் நின்மதியாக வாழ்வோம் என்று சென்று குடியேறிக் கொண்டிருக்கின்ற அந்த மக்களிடம் மிகவும் கேவலமான முறையில் ஒரு மத குருவின் தலைமையிலான குழு நடந்து கொண்ட விதம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதற்கு ஒப்பான செயலாக உள்ளது. குறித்த பொது பல சேனா அமைப்பினர் குறித்த மக்களிடம் 'மரக்கலயா சோனகர்கள் மரத்திலிருந்து இலை கொட்டுவது போல் பிள்ளைகளைப் பெற்றுக் குவிக்கின்றார்கள். இவர்களுக்கு நாங்கள் காணி கொடுக்க வேண்டியுள்ளது' போன்ற இன்னும் பல மிகக் கேவலமான வார்த்தைகளைக் கூறியதோடு, உடனடியாக இருப்பிடத்தை வட்டு வெளியேறுமாறு  அச்சுறுத்தியுள்ளனர். இவ்வேளை நிகழ்வுகளை அமைதியாக பொலிசார் கேட்டுக் கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இது மாத்திரமின்றி மன்னார் முசலி பிரதேச செயலாகத்திற்கு எந்தவித முன்னறிவித்தலும் இன்றி அங்கு சென்ற பொதுபல சேனா அமைப்பினர் பிரதேச செயலாளரை அச்சுறுத்தி சில தகவல்களைத் தருமாறு கேட்டு நிருவாகச் செயற்பாடுகளை சுதந்திரமாக செய்வதற்கு இடையூறு விளைவித்துள்ளனர்.

   இவர்கள் எந்தவித நிர்வாக அதிகாரமோ அல்லது அந்தப் பிரதேச மக்களின் அரசியல் அங்கீகாரமோ இல்லாத நிலையில் அந்த பிரதேசத்தின் அரச நிர்வாக செயற்பாட்டில் தலையிடுவது நாட்டின் நிர்வாகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குக் குந்தகம் விளைவிக்கும் செயலாக உள்ளது.

  மேலும் அண்மையில்  கொம்பனி வீதியில் உள்ள நிப்போன் ஹோட்டலில் ஜாதிக பல சேனா அமைப்பினர் பொலீசாரின் அனுமதியோடு சட்ட ஒழுங்குகளைப் பின்பற்றி அமைதியான முறையில் ஒன்று கூடி பத்திரிகையாளர் மாகாநாடு ஒன்றை நடாத்துவதற்கு தயாராகிக் கொண்டிருந்த வேளை அதற்குள் அத்துமீறி பலாத்காரமாக கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட பொதுபல சேனா அமைப்பினர் அங்கு பிரசன்னமாகியிருந்த கண்ணியத்துக்குறிய உலமாக்கள், பொளத்த மத குறுமார்களை மிகக் கேவலமான முறையில் பேசியதோடு அவர்களை அச்சுறுத்தி மன்னிப்புக் கேட்க கோரியதோடு பெறுமதி மிக்க ஆவனங்கள் போன்றவற்றை எடுத்துச் சென்றுள்ளதாக அதில் பிரசன்னமாகியிருந்தவர்கள் தெரிவிப்பதோடு, வீடியோ காட்சிகளும் சாட்சியமாக உள்ளது. இதற்கிடையில் நாட்டின் சட்டம் ஒழுங்குகளைப் பாதுகாப்பதற்குப் பொறுப்பான பொலீஸ் உத்தியோகத்தர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளதாக அறிய முடிகிறது.

    இந்த நாட்டின் அரசியல் அமைப்பின் அடிப்படை உரிமைகளில் ஒன்றுதான் தான் விரும்பிய இடத்தில் வாழ்வதற்கான உரிமை, அத்தோடு கருத்து வெளியிடும் சுதந்திரம், அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை, தான் பின்பற்றும் மதத்தை சுதந்திரமாக பின்பற்றும் உரிமை. ஆனால் இவைகளைச் செய்வதற்கு இன்று நாட்டில் அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கவேண்டிய பொலீசார்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது இந்த அடிப்படை உரிமைகள் பொது பல சேனா அமைப்பினரால் மீறப்படுகின்றது. இந்த நிலை நாட்டின் சட்டம் ஒழுங்கு என்பவற்றை கேள்விக் குறியாக்கியுள்ளது.

  இவ்வாறு நாட்டின் சட்ட ஒழுங்கை தாங்கள் நினைத்தபடி கையில் எடுத்து செயற்பட முடியாது. கடந்த கால வரலாற்றில் தென்னிலங்கையில்   ஜே.வீ.பி யினரும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் சட்டம், ஒழுங்கை தனது கையில் எடுத்து செயற் பட்டதால் 30வருட யுத்தத்தில் பல உயிர்கள் கொல்லப் பட்டனர், பலர் ஊனமுற்றவர்களாகவும், விதவைகளாகவும் ஆக்கப்பட்டனர். இதன் பாதிப்பு இன மதத்திற்கு அப்பால் இலங்கையிலுள்ள அனைத்துத் தரப்பினரும் இதனால் துன்பத்துக்கும், இழப்புகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். எனவே இது போல் பொதுபல சேனா அமைப்பினரின் இந்த அடாவடித்தனம், அத்துமீறல்கள் தொடருமானால், யுத்த கால நிகழ்வுகளை மீண்டும் மீட்டிப் பார்க்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

No comments

Powered by Blogger.